மதுரை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக இராம ஸ்ரீனிவாசன் களம் காண்கிறார். இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பதாக அனைத்து தரப்பு மக்களும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் இராம ஸ்ரீனிவாசன் சார்பில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்;
DNT சமுதாயத்திற்கு ‘‘ஒற்றைச் சான்றிதழ்’’ வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.
மூத்த தலைவர் திரு.மூக்கையா தேவர் அவர்களின் பிறந்த நூற்றாண்டு என்பதால் மத்திய அரசின் சிறப்பு தபால் தலை அவர்களின் நினைவாக வெளியிட பெரும் முயற்சி அளிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிக வளாகம் ‘‘ராணி மங்கம்மாள்’’ பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனைக்குள் மன்னர் திருமலை நாயக்கர் ‘‘திருவுருவச் சிலை’’ அமைய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை நிறைவேற முயற்சி எடுப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.
மதுரை பாண்டியர்கள் தேசத்திற்காக செய்த தியாகம் மகத்தானது.
1801 ஜூன் 16ஆம் நாள் திருச்சி மலைக்கோட்டையில் மாவீரன் சின்னமருது அவர்கள் வெளியிட்ட ஜம்பு தீவு பிரகடனம் வரலாற்று சிறப்புமிக்கது.
ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் விடுதலை முழக்கமிட்ட முதல் பிரகடனம்.
சிறப்பு வாய்ந்த அந்த ஜம்பு தீவு பிரகடனம் மாணவர்களின் பாடநூல்களில் இடம்பெற பெரும் முயற்சிகள் எடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
மதுரை காந்தி என்று அழைக்கப்பட்ட சௌராஷ்டிரா சமூக தலைவர் திரு.என்.எம்.ஆர். சுப்பராமன் அவர்களுக்கு மதுரையில் மணி மண்டபம் அமைக்க பெரும் முயற்சி எடுப்பேன்.
சௌராஷ்டிரா சமுதாய புகழ் பெற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு மதுரையில் ஒரு நினைவு தூண் அமைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.