ஒரே நாடு
நேரடி ட்ராக்கர்

அரசியலை நாள்தோறும் கணக்கு வைக்கிறோம்.

ஒரே நாடு — எண்களுடன் இயங்கும் சுயாதீன தமிழ் அரசியல் டிஜிட்டல் இதழ். அரசு ஆவணங்களே எங்கள் ஆதாரச் சீட்டு.

மத்திய அரசுLIVE
நாள்4,518

2014 முதல் தொடர்ந்து · 26 மே 2014 →

LIVEநாள் 4,518

மோடி அரசு — நாள்தோறும் சாதனைப் பதிவு

2014 முதல் தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள், கட்டமைப்பு, ஏற்றுமதி சாதனைகளை நாள்தோறும் பதிவு செய்யும் தடம்.

செங்கோட்டையில் பிரதமர் மோடி — சுதந்திர தின உரை
  1. 20 ஆகஸ்ட்

    Aadhaar App செயலியின் பதிவிறக்கங்கள் ஐந்து கோடியைத் தாண்டின. இந்தச் செயலியின் மூலம் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது மொபைல் எண்ணைப் புதுப்பித்துள்ளனர். மேலும், 15 லட்சத்திற்கும் அதிகமானோர் முகவரியையும், 23 லட்சத்திற்கும் அதிகமானோர் மின்னஞ்சல் முகவரியையும் புதுப்பித்துள்ளனர்.

    PIB
  2. 20 ஆகஸ்ட்

    கிராமப்புறக் குடிநீருக்கான Sujalam Bharat தரவுக் கொள்கை — Sujalam Bharat டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் கீழ், கிராமப்புறக் குடிநீர் தொடர்பான தரவுகளைப் பகிர்வது, பல்வேறு அமைப்புகளுக்கு இடையே பயன்படுத்துவது மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அணுகுவது ஆகியவற்றுக்கான தேசியக் கொள்கையை மத்திய ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டது. இதன் மூலம் கிராமப்புறக் குடிநீர் நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் சேவை வழங்கல் மேலும் மேம்படுத்தப்படும்.

  3. 18 ஆகஸ்ட்

    இந்தியாவில் தயாரிக்க 405 பாதுகாப்புத் துறைப் பொருட்கள் — பாதுகாப்புத் துறைக்குத் தேவையான 405 முக்கியப் பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான ஆறாவது உள்நாட்டு உற்பத்திப் பட்டியலைப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது. இதன் மூலம் இந்திய நிறுவனங்களுக்கு சுமார் ₹3,070 கோடி மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றிகரமாக உருவாக்கப்படும் பொருட்கள் இந்திய நிறுவனங்கள், MSME-கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும்.

  4. 18 ஆகஸ்ட்

    வீடுகளுக்கான குழாய் இயற்கை எரிவாயுத் திட்டத்திற்கு ஊக்கத்தொகை — ஏற்கெனவே வழங்கப்பட்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படாத PNG குழாய் இயற்கை எரிவாயு இணைப்புகளைச் செயல்படுத்தவும், மேலும் அதிகமான வீடுகளுக்குச் சுத்தமான குழாய் சமையல் எரிவாயுவைக் கொண்டு செல்லவும் நாடு முழுவதும் புதிய ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் 1 செப்டம்பர் 2026 முதல் நடைமுறைக்கு வரும்.

    PIB
  5. 18 ஆகஸ்ட்

    இரண்டு கோடி குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பு — UIDAI நடத்திய நாடு தழுவிய இயக்கத்தின் மூலம் இரண்டு கோடிக்கும் அதிகமான குழந்தைகளின் கட்டாய ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கம் 1.56 லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகளில் நடத்தப்பட்டது. 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 30 செப்டம்பர் 2026 வரை இந்தப் புதுப்பிப்பை இலவசமாகச் செய்துகொள்ளலாம்.

    Akashvani
முழு ட்ராக்கர் →

ட்ராக்கர்கள்

எல்லா நேரடிக் கணக்குகளும் ஒரே இடத்தில்

LIVE

தமிழ்நாட்டிற்கு மோடி அரசு செய்தவை என்னென்ன?

கும்மிடிப்பூண்டி–கூடூர் ரயில் பாதை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் — தமிழ்நாடு–ஆந்திராவை இணைக்கும் 90 கி.மீ. கும்மிடிப்பூண்டி–கூடூர் வழித்தடத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதைகளை அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

Akashvani
LIVE

நீட் 2026: கசிவிலிருந்து சட்டம் வரை — நிகழ்வுப் பதிவேடு

பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல். அறிமுகத்திலிருந்து வெறும் எட்டு நாட்களில்: ஜூலை 27 மக்களவையில் அறிமுகம், 29-இல் மக்களவை, 30-இல் மாநிலங்களவை நிறைவேற்றம். ஒவ்வொரு மாநிலமும் விரைவு நீதிமன்றத்தை நியமிக்க வேண்டும் என்பது இனி சட்டக் கடமை.

PIB
LIVE

மத்திய திட்டங்கள் — எண்களில் சாதனை

58.90 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகள்

கட்டுரைகள்

ஆழமான வாசிப்பு — ஆதாரங்களுடன்

அனைத்து கட்டுரைகளும் →

வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை

சில காலம் இந்துக்களையும், மோடி அரசையும் விமர்சனம் செய்யாமலிருந்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் முகமது ஹமீத் அன்சாரி , செப்டம்பர் 2026-ல், டெல்லியில் இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், , "கவனிக்கவும், இந்தியாவுக்கான ஆபத்து கம்யூனிசம் அல்ல.

ஈரோடு சரவணன்

6 அக்டோபர் 2026

மேலும் படிக்க →

ஒவ்வொரு வாக்குக்கும் மதிப்பு வேண்டும் — அதற்குத்தான் SIR!

இறந்தவர்களின் பெயர், இரட்டைப் பதிவு, குடியுரிமை இல்லாதோர் — இவற்றைச் சரிசெய்வது வாக்குரிமைப் பறிப்பு அல்ல; ஒவ்வொரு உண்மையான வாக்கின் மதிப்பையும் காக்கும் பணி. நீக்கப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கையை மட்டும் காட்டி அச்சத்தை விதைக்கும் காங்கிரஸிடம் ஒரு கேள்வி: இந்தச் சரிபார்ப்பை ஏன் எதிர்க்கிறீர்கள்?

Oreynaadu Desk

28 செப்டம்பர் 2026

மேலும் படிக்க →

எல் நினோவும் பன்னீர் பட்டர் மசாலாவும்

இயற்கையை அபகரித்ததால் வந்தது எல் நினோ. அதே உணவு, அதே உடை, அதே ரசனை என ஒரு வட்டத்துக்குள் சுருங்கும்போது மூளைக்கும் ஒரு எல் நினோ வருகிறது. ரப்பர் பாண்ட் போல இழுத்தால் மட்டுமே விரியும் மூளையை மூலையிலிருந்து வெளியே கொண்டு வர அழைக்கும் கட்டுரை.

எஸ்.ஆர். சேகர்

24 செப்டம்பர் 2026

மேலும் படிக்க →