மலை… மலை எனும் புதிய சிந்தனை வெறும் நம்பிக்கை மட்டுமல்ல ஓர் தலைமைப் பண்பு!

நிகழ மறுத்த அற்புதம் தற்போது இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதை கட்டியம் கூறி எவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அதற்கான பயணத்தை அதுவே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.

திடீரென வந்து நிற்கும் காட்டாறு போல் அல்லாமல், தொடர்ச்சியாக அலைபாய்ந்து சென்று கொண்டிருக்கும் நதியில், படிந்துவிட்ட கழிவுகளையும், கசடுகளையும் துடைத்தெறிந்துச் செல்லும் புது வெள்ளமாக பாய்ந்து, நிலைத்து நிற்கும் நதி இது என்று நாம் கட்டியம் கூறி உரைக்கலாம்.

புழுங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு ஓர் விடுதலையாக… நிர்கதியாக நின்றவர்களுக்கு ஒரு விமோசனமாக… ஒரு சிந்தனை, ஒரு முகம், ஒரு சாட்சி, ஒரு செயல்பாடு தற்போது அரங்கேறத் தொடங்கியுள்ளது.

அது, அவர்களுக்கு சித்தாந்த ரீதியில் மாபெரும் நம்பிக்கையூட்டும் பயணத்தைக் கொடுத்து, உத்வேகத்தை அளித்து, செயல்பட வைத்துக்கொண்டுள்ளது.

தீய சக்திக் கூட்டத்தை சேர்ந்தவர்களை தலைவன் என்றும், சகோதரன் என்றும் தனக்குப் பிடித்த தலைமை பண்பு உள்ளவன் என்றும் இந்த முகாமில் இருந்த பலரும் கூறிக்கொண்டிருந்தனர்.
மனதார அப்படிக் கூறாவிட்டாலும், சூழல் அவர்களை அப்படிக் கூற வைத்தது. அதையெல்லாம் கேட்டு, அழுது புலம்பி, வெளியில் கூட சொல்ல இயலாத நிலையில் பலர் துடித்துக்கொண்டிருந்தனர்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஓர் ஆறுதலாய், நம்பிக்கையூட்டும் கலங்கரை விளக்காய் இந்த சக்தி செயல்படுகிறதென்றால் அது மிகையாகாது.

‘‘நான் உள்ளதை உள்ளபடி எடுத்து இயம்புவேன். எவருக்கும் நாம் சிந்தனா ரீதியில் அடிமையாக இருக்க வேண்டியது இல்லை. எதையும் நாம் வீழ்த்த முடியும்’’ என்ற நம்பிக்கையைக் கொடுத்த ஒரு மாபெரும் சிந்தனை, மாபெரும் முகம், மாபெரும் செயல்பாடு இது என்றே நாம் சொல்லலாம்.

சிந்தனைக்குத் தேவை எங்கிருந்து வந்தது? இதற்கு முன் ஏதேனும் முன்னுதாரணங்கள் இங்கு இருந்தனவா? இருந்த முன்னுதாரணங்கள் எப்படி இருந்தன?

‘‘அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியும் அல்ல; நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல’’ என்று கூறியதைக் கேட்டு, அவரது தொண்டர் அடிப்பொடிகள் சிலாகித்து, அதில் இலக்கிய நயத்தை தேடிக் கொண்டிருந்த ஒரு மூடர் கூட்டத்தின்பால் இந்தச் சமுதாயம் அடிமைப்பட்டுக் கிடந்தது.

அதுமட்டுமின்றி, திராவிட நாட்டை பாவாடைக்குள்ளே காணலாம் என உளறிக் கொட்டிய அவனைத் தலைவன் என்று வைத்து, ஐம்பது  ஆண்டுகள் கொண்டாடிய மாகாணம் இது.

இந்தச் சூழலில் தங்களுக்கு நம்பிக்கை ஒளி  கிடைக்கும் என்று யாராவது நம்ப இயலுமா? அதுமட்டுமின்றி தொடர்ந்து சிந்தனைத் தாக்குதலில் கிரிப்டோக்களின் ஆதிக்கம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த மாகாணத்தில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் இருக்கத் தான் செய்து வந்தது.

அறிவு, ஒழுக்கம், ஒற்றுமை, சர்வஸ் ஸ்பரிஷி, எல்லோருக்கும் ஓர் இடம், எல்லோருக்கும் ஓர் பணி என்று நாம் கூறி தொடர்ந்து இயங்கி வந்தோம். ஆனால் அந்த முத்திரையை அழுத்தம் திருத்தமாக இந்த தீய சக்திகளின் ஆதிக்கத்திற்கு இடையே பதிய வைக்க முடிந்ததா என்றால்…. இந்த சமுதாயம் அதற்கு இடம் கொடுத்ததா என்றால்… அறுதியிட்டு ‘ஆம்’ என்று நம்மால் சொல்ல முடியாமல் தான் இருந்து வந்தோம். இதுவே நிதர்சனம்.

தீய சக்திகளிடமிருந்து சமுதாயத்திற்கு விடிவைக் கொண்டுவர, வெறும் அறிவு, ஒழுக்கம் மட்டும் போதுமானதாக இல்லை. அதைவிட மிகவும் தீவிரமான ஒரு உத்வேகமும், ஆற்றலும் தேவைப்பட்டது. அதை ஏதோ ஒரு வகையில் தர இயலாமல் நம் சித்தாந்தம் பயணம் செய்து கொண்டிருந்தது.

இது எவருடைய கோளாறும் கிடையாது. சமுதாயம் என்ன பிரதிபலிக்கிறதோ, அதுவே இங்கு உள்ளது என்பது ஒரு பொதுவான கண்ணோட்டம். அந்த கண்ணோட்டத்தின்படி  சிந்திக்கும் போது, சமுதாயமானது தனக்கு இத்தகையத் தேவை உள்ளது என்று எடுத்து இயம்பவே இல்லை. கடந்த 50 ஆண்டுகளாகவே இந்த நிலை தொடர்ந்து இருந்தது எனவும் கூறலாம்.

இந்நிலையில், இது மாற்று சக்தி அல்ல… காலத்தின் கட்டாயம். இந்த கட்டாயமான சக்தி தேவை, ஆற்றல் தேவை என்று சமுதாயம் இதுவரை எடுத்து இயம்பாமல் இருந்த நிலையில் இன்று, வேண்டும் வேண்டும்… மலை வேண்டும்… மலை வேண்டும் என்கிறது.

இதோஞ் நமக்கு இன்னது தான் வேண்டுமென்று யாரும் சமுதாயத்தில் முன்னெடுத்து எதையும் கூறவில்லை. இருந்தபோதிலும், அதன் தேவை இங்கு இருந்து கொண்டிருப்பதை பலரும் அறிவர். ஆனாலும் அதை இட்டு நிரப்ப நம்பிக்கைக்குரிய எவரும் முன்வரவில்லை.

எதையோ ஒன்றைத் தேடி திக்கற்ற நிலையில் சமுதாயம் அலைந்து கொண்டிருந்தது. நாமும் அலைந்து கொண்டிருந்தோம். நமக்கு முன்னே இருந்தவர்கள் எவரும் அவ்வாறு காட்சி தரவில்லை; நம்பிக்கை ஊட்டவில்லை; நம்பிக்கையை தொலைக்கக் கூடியவர்களாகத் தான் இருந்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் நமக்கு கிடைத்தது தான் ஒரு புதிய சிந்தனை; புதிய செயல்பாடு; புதிய வரவு. அதுதான் மலை… மலை எனும் புதிய சிந்தனை வெறும் நம்பிக்கை மட்டுமல்ல ஓர் தலைமைப் பண்பு; ஒரு செயலாற்றல், ஒரு உத்வேகம், ஒரு முன்னுதாரணம், ஒரு பண்பாடு, ஒரு கலாச்சாரம் என்று பல வார்த்தைகளை இட்டு  அதை நாம் அழைக்கலாம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த சிந்தனைக்கு பெயர் தான் மலை எனும் அண்ணாமலை.

திடீரென அலை அலையாகக் கூட்டம், மக்கள் கூட்டம். எங்கெங்கு காணினும் செல்லும் இடம் எல்லாம் தலைகள். எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது? திடீரென எவர் சொல்லி வந்தார்கள் இவர்கள்? யாராவது ஆணையிட்டார்களா? எவருக்கும் முன்பே தெரியுமா இப்படி இவர்கள் திரள்வார்கள் என்று? எது இவர்களை ஆட்டுவிக்கிறது? புதியதோர் உலகம் செய்வோம் என்று அவர் அழைக்கவில்லை. ஆனால், இருப்பது சரியில்லை புதியதோர் உலகை அமைக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே நாம் இணைந்து பணியாற்றும் நேரம் வந்துவிட்டது.

நமது சுயநலத்தை ஒதுக்கி, பொதுநலத்தை முன்னிறுத்தி, பணியாற்றும் காலம் வந்துவிட்டது. சுயநலத்திற்கான கூட்டத்தின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கூக்குரலை அவர் இட்டதும்…இத்தனை நாட்களாக இவர் எங்கிருந்தார்…. இந்த நம்பிக்கையை நமக்கு ஊட்ட ஒருவரும் இதுவரை இருந்ததில்லையே…இப்போது வந்திருக்கிறார். புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என்ற உத்வேகத்தில், மக்கள் திரள் திரளாக வரத் தொடங்கியுள்ளனர்.

இது தானாகச் சேர்ந்த கூட்டம். அவர் குரலுக்குக் கிடைத்த பிரதிபலிப்பு. இதுதான் தலைமைப் பண்பு; மக்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது என்று இதை தெளிவாகச் சித்தரிக்க முடியும்.

இருந்தபோதிலும் ஏன் வருகிறார்கள்…எப்படி வருகிறார்கள்… எது அவர்களை வரத் தூண்டுகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலைத் தேடும் போது தான், மக்கள் இவ்வளவு நாட்களாக தங்களுக்கு இப்படி ஒரு சிந்தனை, இப்படி ஒரு பண்பு, இப்படி ஒரு ஆற்றல் வேண்டும் என்று ஏங்கித் தவித்து இருக்கிறார்கள் என்பது நமக்கு புரிய வருகிறது.

தற்போது தான் இந்தச் சூழலில் இவ்வாறு ஒரு தேவை இருப்பதை அறிந்து, ஒரு சக்தி தன்னை முன்னிறுத்த தொடங்கிய நேரத்தில், மக்கள் அதை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

அதன் அடிப்படையில் மட்டுமே இந்த கூட்டம் தானாகச் சேர்ந்த கூட்டமாக, பெரும் திரளாக வந்து கொண்டிருக்கிறது. மேலும் மேலும் வந்து கொண்டிருக்கிறது. மேலும் மேலும் வரும் என்று நாம் அறுதியிட்டுக் கூற முடிகிறது.

மக்கள் விரும்பும் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரு ஜீவன், ஒரு சிந்தனை, ஒரு ஆற்றல் நம் முன்னே விஸ்வரூபம் எடுத்து, தன் திருவிளையாடலை தொடங்கியுள்ளது.

ஓர் தீட்சண்யத்தை, தெளிவை, இலக்கை முன்னிறுத்தி தொடர்ந்து போராடத் தூண்டும் தலைமை பண்பு தற்போது அமையத் தொடங்கியுள்ளது. இது மக்களுக்கு தெளிவாக புரியத் தொடங்கியுள்ளது.

நம்பிக்கையும், தெளிவும், உண்மையும், சத்தியமும் ஒரு தலைவனுக்குத் தேவை. அது இவனிடம் உள்ளது என்று மக்கள் கருத தொடங்கியதின் விளைவே, இத்தகைய தொடர் ஆதரவிற்கு காரணம் என்று நாம் அறுதியிட்டு கூற முடியும்.

வெற்றி வெற்றி என்று கூறுவது இரண்டாம் பட்சம் தான். ஏனெனில் வெற்றிக்கான இலக்கை நோக்கிய பயணமே பெரும் பயணம். அது மட்டும் இன்றி 50 ஆண்டுகள் ஒரு தீய சக்தி இந்த மாகாணத்தை சிந்தனா ரீதியில் தீவிரமாக அடிமைப்படுத்தியிருந்தது. அந்தச் சூழலில் அதை மாற்றுவதற்கான முயற்சி என்பதே ஒரு பெரும் பிரயத்தனம்.

அந்தப் பிரயத்தனத்தை தருவதற்கு தேவையான தலைமையே நம்முடைய கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தது. மக்களாகிய நாம் நொந்து நூலாகி இருந்தோம். நமக்கெல்லாம் விடிவு காலம் வரவே வராது; நம்மை வழிகாட்ட ஒருவன் வரவே மாட்டான் என்கிற நிலைமையில் தான் நாம் இருந்தோம்.
அப்போது தான் இதையெல்லாம் மாற்றுவதற்கு நான் புறப்பட்டு வந்துள்ளேன் என்று வெறும் வார்த்தைகளால் கூறாமல், தொடர்ந்து செயலில் நின்று, நிதானமாக அடித்து ஒரு பெரும் சூறாவளியை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.

என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை தன்னுடைய வார்த்தைகளால் விளக்காமல், மக்களுக்கு தானாக புரிய வைத்த ஓர் தலைமைப் பண்பு. அது மக்களிடம் ஒரு பெரும் பயணத்தை நாம் மேற்கொண்டுள்ளோம் என்பதை உணர்த்தியுள்ளது.

இவருடன் சேர்ந்து செல்லும் நம்முடைய பயணம் பாதுகாப்பானதாக இருக்கும், வெற்றித் திசையை நோக்கி மட்டுமே செல்லும் என்ற நம்பிக்கையை நம் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது இவரின் செயல்பாடுகள் என்றால் அது மிகையாகாது.

மலை எனும் புதிய சிந்தனை மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது என்று  நாம் கட்டியம் கூறத் தேவையில்லை.

டாக்டர் சோம.தர்மசேனன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top