இதற்கு ஒரு நிவாரணம் உண்டு, அது லஞ்ச ஒழிப்பு: அர்ஜூன மூர்த்தி!

சென்னை மழை வெள்ளத்தில் லட்சக்கணக்கான மக்களை துன்பத்திற்கு தள்ளியுள்ளது இந்த விடியாத திமுக அரசு. புயல் வருவதற்கு முன்னர் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து மக்கள் வெளியில் வரமுடியாத அளவிற்கு உள்ளது.

மத்திய மோடி அரசின் ஸ்மார்ட் சிட்டி நிதியில் சென்னை மாநகர வடிகால் பணிக்காக ரூ.4,400 கோடியில் சிறப்பு திட்டம் ஒன்றை விடியாத திமுக அரசு செயல் படுத்தியதாக கூறப்படுகிறது!  இந்தப் பணிகள் 90 சதவிகிதம் முடிக்கப்பட்டது என்றும், 80 சதவீதம் முடிக்கப்பட்டது என்றும், வேறு வேறு அமைச்சர்கள் வேறு வேறு சதவிகிதத்தைச் சொல்லி வந்தனர்!  மக்களும் 4000 கோடி செலவில் எல்லாம் சீர்த்திருத்தப்பட்டு விட்டது என எண்ணி மகிழ்ந்து வந்தனர். வந்தது மிக்ஜாம் புயல். வெள்ளத்தோடு வெல்லமாக திமுக அரசின் பொய்களும் கரைந்து ஓடியது.

திமுக அமைச்சர் மா.சுப்பிரமணியன் 20 சென்டி மீட்டர் மழை பெய்தால் கூட ஒரு மணி நேரத்தில் அதன் சுவடு தெரியாமல் மறைந்துவிடும் என்று கூறியதை மக்கள் மீண்டும், மீண்டும் சுட்டிக்காட்டி என்ன ஆயிற்று என்று கேள்வி கேட்கிறார்கள்.

அவர்களுக்கும் ஒரு படி மேலே சென்ற அமைச்சர் உதயநிதி, வெள்ளப்பகுதியை நான் பார்வையிட தயாராக இருந்தபோது, தண்ணீர் தேங்கி இருந்தால்தானே நீங்கள் வரவேண்டும், என்று என் தொகுதி மக்கள் என்னிடம் கூறினார்கள் என உதயநிதி சிறிது காலத்திற்கு முன் கூறிய வீடியா வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில், மூன்று நாட்களாகியும் மீட்பு பணிகளை செய்யாததால், பாதிக்கப்பட்ட மக்கள் விடியாத திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 4000 கோடிக்கு மழைநீர் வடிகால் அமைத்திருந்தால் ஏன் நாங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்க போகிறோம். மழையின்போது உயிரிழந்தவரின் சடலத்தை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச்செல்வதற்கு இந்த அரசு தள்ளிவிட்டது என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஓட்டு கேட்க மட்டும் வரிசையில் வருகிறீர்கள், ஆனால்   இந்த மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் போது, எங்களை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஏன் பார்க்க வரவில்லை எனவும் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மழை வெள்ளம் பாதிப்பு தொடர்பாக பாஜக மாநில பொறுப்பாளர் அர்ஜூன மூர்த்தி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஜூனியர் ஆர்டிஸ்ட்களை வைத்து நடிப்பாக அரசியல் பேசுபவர்கள் அல்ல இவர்கள்!

உண்மையை விளிம்பிலிருந்து, துயர் மனம் வெடித்து குமுறுகிறார்கள். வேதனை மனதை உலுக்குகிறது!

இதற்கு ஒர் நிவாரணம் உண்டு, அது லஞ்ச ஒழிப்பு.. என பதிவிட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் நடைபெறும் லஞ்சத்தை ஒழித்தாலே மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் கிடைக்க வழிவகை செய்யும் என ஒரே வார்த்தையில் அவர் சொல்லி இருப்பது மக்களிடம் பேசு பொருளாகி இருக்கிறது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top