அலட்சியம், தவறான நிர்வாகம், பேராசையே, மழைநீர் தேங்க காரணம்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

சென்னையில் மிக்ஜாம் புயலால் இன்றுவரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மூன்று நாட்களாக தொழில்நுட்ப ரீதியாக, தங்கள் குரல்வளை நெறிக்கப்பட்டிருந்த முக்கியப் பிரமுகர்கள், அரசின் மீதான தங்கள் கடுமையான விமர்சனத்தை பொதுவெளியில் முன் வைக்கத் துவங்கி உள்ளனர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பதிவு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

இதுு விஷயமாக
அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, ‘‘கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 100 மணி நேரமாவது முழங்கால் அளவு தண்ணீர் நீடிப்பதும், மின்வெட்டும் ஏற்படுவதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. இது கடினமான உண்மைதான்.  

ஆனால் இந்த வருடம் பெய்த மழை புதிய வரையறைகளை அமைத்திருக்கிறது. குறிப்பாக கொளப்பாக்கம் என்பது ஒரு ஏரியோ தாழ்வான பகுதியோ அல்ல. சென்னையில் மற்ற எந்தப் பகுதியையும் விட இங்கு ஏராளமான திறந்தவெளிகளும், குளங்களும் உள்ளன. அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை  இவையெல்லாம் மழைநீர் மற்றும் கழிவு நீரை ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது.

அதனால் ஒவ்வொரு தடவையும் ஆறுபோல் எங்கள் குடியிருப்புகளை மழைநீர் தாக்குகிறது. இந்த நேரத்தில் நோய்வாய்ப்பட்டாலோ, அல்லது மருத்துவ எமர்ஜென்ஸியில் இருந்தாலோ அவை மரணம் வரை கொண்டு செல்கிறது. மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகும் சில பம்புகளும் நிரந்தரமாக உள்ளன. மக்களைத் தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன்.

சென்னையில் எங்கு பார்த்தாலும் நேர்மறையான நெகிழ்ச்சியான எண்ணங்கள் உள்ளன. சென்னை மக்களின் ஆன்மாவிற்குப் பாராட்டுக்கள். கூடிய விரைவில் தீர்வை எட்டுவதற்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். நியாயமற்ற எதிர்ப்பார்ப்புகள் ஏதும் எனக்கு இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள் என நம்புகிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஏற்கனவே நடிகர் விஷால் அரசின் அலட்சியம் பற்றி குறிப்பிட்டு, மக்களின் வரிப்பணம் எங்கே சென்றது என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு திமுக ஐடிவிங்கில் உள்ள உபிகள் அவரை தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். தற்போது பிரபல இசையமைப்பாளர்  ஒருவர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top