இரவு, பகல் பாராமல் மக்களை மீட்கும் பணியில் பாஜக: மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டு!

சென்னைக்கு  வந்த மிக்ஜாம் புயலால் தலைநகரமே தீவுகள் போன்று மாறியுள்ளது. மக்கள் வெளியேற முடியாதவாறு மழைநீர் சூழ்ந்துள்ளதால் அவர்களை பாஜக இளைஞர் அணி பத்திரமாக படகுகள் மூலமாக மீட்டு வருகின்றனர். அவர்களைப் பாராட்டி, மாநில தலைவர் அண்ணாமலை,  அவர்களின் சேவைகளுக்காக தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் மிக்ஜாம் புயலால் கொட்டித்தீர்த்த மழையால் மாநகராட்சி ரிப்பன் மாளிகை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தேனாம்பேட்டை, மாம்பலம், ஆவடி, தாம்பரம், பெருங்களத்தூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

இங்கெல்லாம் மீட்பு பணியில் மாநில அரசு இறங்கவே இல்லை. ஆனால் பாஜக இளைஞரணி அபாரமாக செயல்பட்டு மக்களை வெட்டு வருகிறது. 

இந்த நிலையில், மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், கூறியிருப்பவதாவது:

பாஜகவின் காரியகர்த்தர்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன்.
நமது பாஜக ஹெல்ப்லைன் எண்ணுக்கு சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான அழைப்புகள் வருகிறது. அது போன்றவர்களுக்காக எங்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சிவா ரமேஷ் தலைமையில் காரியகர்த்தர்கள் படகுகளை ஏற்பாடு செய்து அயராது மக்களை மீட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top