அம்பேத்கர் இல்லாவிட்டால் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த நான் பிரதமராகியிருக்க முடியாது: பிரதமர் மோடி!

அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால், ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான், நாட்டின் பிரதமராகியிருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிகார் மாநிலம் கயாவில் இன்று (ஏப்ரல் 16) நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒரு புரட்சி நடந்துள்ளது. அது பற்றி பெரியளவில் எங்கும் பேசப்படவும் இல்லை, விவாதிக்கப்படவும் இல்லை. நான் நாட்டில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் என்றார்.

அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால், ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான், நாட்டின் பிரதமராகியிருக்க முடியாது. மக்களின் ஆசியே எனக்கு இந்தப் பதவியை வழங்கியுள்ளது. இந்தியா வளமானதாக மாற வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரின் கனவு என்றார்.

பல ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ், நேரத்தை வீணடித்தது. பீகாரை ஆண்ட ராஷ்ட்ரிய ஜனதா ஆட்சியில், ஊழல் செய்வதே ஒரு தொழில்போல எங்கும் பரவியிருந்தது. அந்த அரசு பீகாருக்குக் கொடுத்தது இரண்டுதான் ஒன்று காட்டாட்சி, மற்றொன்று ஊழல் எனக் குற்றம் சாட்டினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top