வசமாக சிக்கிய திமுகவின்  ஹிந்தி எதிர்ப்பு டூல் கிட்.!

ஹிந்தி தெரியாது என கோவா விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்டதாக கூறிய தமிழகத்தைச் சேர்ந்த சர்மிளா என்ற பெண் யார் என வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோவா விமான நிலையத்தில் சென்னைக்கு செல்வதற்காக ஷர்மிளா ராஜசேகர் என்ற பயணி கடந்த டிசம்பர் 13ஆம் தேதி இரவு பாதுகாப்பு சோதனைக்காக நின்றுள்ளார். அனைவரிடமும் சோதனை மேற்கொள்வது போன்று ஷர்மிளாவிடம் சோதனை நடைபெற்றுள்ளது.

ஆனால் திடீரென்று தன்னிடம் பாதுகாப்பு படை வீரர் ஹிந்தியில் பேச கட்டாயப்படுத்தினார் என்று சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டிருந்தார்.

உடனே தமிழகத்தில் உள்ள விடியாத அரசின் முதல்வர் ஸ்டாலின், அய்யோ அது எப்படிங்க ஹிந்தியில் பேச கட்டாயப்படுத்துவீங்க என அவரது பாணியில் உருட்ட ஆரம்பித்தார். அதற்கு அடுத்து திமுகவிற்கு முட்டு கொடுப்பவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அய்யய்யோ.. ஹிந்தியை திணிக்கிறாங்களா என்று அவர்கள் பாணியில் சமூக வலைத்தளங்களில் முட்டுக் கொடுக்க தொடங்கினர்.

இன்னும் பழைய காலத்திலேயே தமிழக மக்கள் உள்ளனர் என ஸ்டாலின் கனவு உலகத்தில் வாழ்ந்து வருகிறார். சென்னை மழை வெள்ளத்தை மறைக்க திமுகவினர் பயன்படுத்திய ஹிந்தி எதிர்ப்பு டூல் கிட்தான் ஷர்மிளா என்று அவரது பழைய ட்வீட்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பாஜகவினர் பதிவிட்டு வந்தனர்.

ஷர்மிளாவின் பழைய ட்வீட்களில் ஹிந்தியில் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி ஹிந்தி கூட நல்லா பேசுவார் என்ற வீடியோவும் வெளியானது. இதனால்தான் திமுகவினர் ஷர்மிளாவை ஹிந்தி எதிர்ப்பு டூல் கிட்டாக பயன்படுத்தலாம் என நினைத்து மண்ணை கவ்வினார்கள். இனிமேல் தமிழகத்தில் ஹிந்தியை வைத்து உருட்ட முடியாது என்பது மட்டும் இதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top