திமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது!

கொரோனா பேரிடர் காலத்தில் எம்.ஆர்.பி. தேர்வில் தேர்ச்சி பெற்ற செவிலியர்கள் அனைவரும், திமுக ஆட்சிக்கு வந்த உடனே கட்டாயம் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தேர்தலுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி  அளித்திருந்தார். ஆனால் அவர் முதல்வரான பிறகும்  இன்றுவரை

அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்ல. இந்நிலையில் பணி நிரந்தரம் கேட்டு  போராட்டம்  நடத்திய செவிலியர்களை இன்று ( 10.10.2023 )  போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். மற்ற 3,290 பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எம்ஆர்பி செவிலியர்கள் சங்கத்தினர்.

கொரோனா சமயத்தில் பணியாற்றிய அனைத்து செவிலியர்களும், திமுக ஆட்சி அமைந்ததும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். இதன் பின்னர் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தொடர் போராட்டம் காரணமாக 2022 -ம் ஆண்டு மார்ச் மாதம் பணி நிரந்தரம் தொடர்பாக அரசு உறுதி அளித்தது. ஆனால் இதுவரையில் பணி நிரந்தரம் செய்யவில்லை.

இதன் காரணமாக 11ம் தேதி வரை உண்ணாவிரத போராட்டத்தை செவிலியர்கள் அறிவித்தனர். அதன்படி சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய அரசு, ஜனநாயகமற்ற முறையில்  போராட்டம் நடத்திய செவிலியர்களை இன்று  வலுக்கட்டாயமாகக் கைது செய்து எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

போராட்டம் நடத்திய செவிலியர்களிடம் காலை 11 மணிக்கு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சொல்லிவிட்டு, கைது செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது எனப் போராட்ட இணை ஒருங்கிணைப்புச்

செயலாளர் விக்னேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இதனைத்  தொடர்ந்து, தீர்வு கிடைக்கின்ற வரை காலவரையற்ற உண்ணாவிரதம் தொடரும் என எம்.ஆர்.பி. செவிலியர்கள் அறிவித்துள்ளனர். 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள்,  செவிலியர்கள், என அனைவர் வாழ்வும் போராட்டமாக மாறி இருக்கிறது விடியா அரசின் செயலின்மையால்! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top