எக்ஸ் வலைத்தளத்தில் பா.ஜ.,வை பின்தொடர்வோர் எண்ணிக்கை 2.1 கோடி பேர்!

உலகளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் எக்ஸ் வலைத்தளத்தில 2.1 கோடி பேரால் பின்தொடரப்படுவதைக் கொண்டாடுகின்ற வகையில் தனது ஆதரவாளர்களுக்கு பா.ஜ., நன்றி தெரிவித்துள்ளது.

உலகளவில் ஒரு வினாடியில் தகவலை தெரியப்படுத்துகின்றதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதன்படி ஒவ்வொரு தனி நபரும், தொழிற்சாலையும், ஐ.டி., கம்பெனியும், அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்கள் என பலரும் சமூக வலைத்தளத்தில் கணக்குத் துவங்கி அதன் மூலம் தங்களது கருத்துக்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர்.

அந்த வகையில் உலகளவில் மிகப்பெரிய உறுப்பினர்களை கொண்ட கட்சியாக பாரதிய ஜனதா கட்சி,  எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கை துவங்கிய நிலையில், தற்போது அதனை 2.1 கோடி பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அதற்கு அடுத்து காங்கிரஸை 99 லட்சம் பேரும், ஆம் ஆத்மியை 65 லட்சம் பேரும், சமாஜ்வாதியை 39 லட்சம் பேரும் பின்தொடர்கின்றனர். இந்த கட்சிகளின்  மொத்த எண்ணிக்கையைக் காட்டிலும் பா.ஜ..கட்சியை அதிகப்படியான நபர்கள்  பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இதனைக் கொண்டாடும் வகையில் எக்ஸ் வலைத்தளத்தில் பா.ஜ., வெளியிட்டுள்ள பதிவில், 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஒன்றாகக் கட்டமைக்கிறோம். நாம் இப்போது 2.1 கோடி ஆதரவாளர்களைப் பெற்று ஒரே குடும்பமாக இருக்கிறோம். இதற்கு நன்றிகள் மற்றும் பாராட்டுகள் எனப் பதிவிடப்பட்டுள்ளது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top