காங்கிரசை எதிர்ப்பது போல் நடித்து அரசியல் செய்யனும்: தி.மு.க.,வின் தில்லாலங்கடி!

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் நடிப்பது போன்று நாமும் காங்கிரசை எதிர்ப்பது போல் காட்டி, பா.ஜ.,வை ஒழிக்க வேண்டும் என திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஒருவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

கர்நாடகத்தில் 
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனை கேட்க வேண்டிய திமுக அரசு, அரசியல் லாபத்திற்காக வாய் மூடி மவுனம் காத்து வருகிறது. இதனால் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி தண்ணீர் இன்றி கருகி வருகிறது.  கடன் வாங்கி  வைத்த பயிர்கள் தற்போது கருகி வருவதை பார்த்து விவசாயிகள் பலர் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் திமுக அரசு கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

இதற்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் பா.ஜ., ஆட்சியில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட தண்ணீர் முறைப்படி வந்தது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா விவசாயிகள் நிம்மதியுடன் விவசாயம் செய்து வந்தனர் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர் 

இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் நாளை (அக்டோபர் 11) கடையடைப்பு நடத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் விருந்தினர் மாளிகையில் நடந்தது. இதில் திமுக மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன், மற்றும் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்டத்தில், தமிழகத்திற்கு உரிய நீரை பெற்று தராத மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் பேசுகையில், காங்கிரஸ் கட்சி எப்படி நடிக்கிறாங்களளோ அதேபோன்று காங்கிரசை எதிர்ப்பதைப் போல் காட்டி,  பா.ஜ.,வை ஒழிக்க வேண்டும். அது தான் நமது கொள்கையாக இருக்க வேண்டும். இந்த கொள்கையை உறுதிபடுத்தினால் தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றிபெற முடியும்.

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது எல்லாம் இரண்டாம் பட்சம். ஆனால் நாம் முழுமையாக எதிர்க்க வேண்டும். எதிர்க்கணுங்கிற மாயத்தோற்றத்தை மக்களுக்கு காட்டவேண்டும். இங்கிருக்கிற ராஜ்குமார் காங்., எம்.எல்.ஏ.,வை மிகக் கடுமையா பேசணும். பேசுனாத்தான், இங்குள்ள தமிழர்கள் எல்லாம் ஒண்ணா இருக்கான். காங்கிரஸ்காரனா இருந்தாலும் ஒண்ணா இருக்கான். எல்லாம் ஒண்ணா தான் இருக்கான்.

தலைவர்களுடன் நிக்கிறான். எதுக்குனாலும் காங்கிரஸ் காரங்க போராடுவாங்கற உணர்வு மக்களிடம் காட்டணும். அந்த உணர்வு வரணும்மான, கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜ்குமாரை கடுமையாக பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசிய வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவு சமூகத் வலைத்தளங்களில் வைரலாகியது மட்டுமின்றி, திமுகவின் உண்மைத் முகத்தை தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 

இந்தக் கபட நாடகத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வன்மையாகக் கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நாடகத்தை புரிந்து கொண்ட மக்கள் திமுகவை  கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது போன்றவர்களை நம்பி ஓட்டு போட்ட  மக்கள் இன்னும் என்ன கொடுமை எல்லாம் அனுபவிக்க போறாங்களா? என்கிறார்கள் நடுநிலை மக்கள்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top