இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி பாஜக சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை விடியா அரசின்  காவல்துறை கைது செய்தது.

கடந்த செப் 2ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வரின் அமைச்சர் மகன் உதயநிதி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் உதயநிதியின் பேச்சு நாடு முழுவதும் கடும் கண்டனத்தை சந்தித்தது.

இந்நிலையில் இந்துக்களின் கோயில்களை நிர்வகிக்கும் அறநிலையத்துறை அமைச்சராக இருந்துக்கொண்டு  சனாதன  ஒழிப்பு மாநாட்டில் காவி வேட்டி கட்டிக் கொண்டு கலந்து கொண்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது போன்ற ஒரு மாநாட்டில் பங்கேற்காமல் சேகர்பாபு தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் இந்துக்களின் மனதை புண்படுத்தும்படி கலந்து கொண்டிருந்தார். எனவே அவர் தனது அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் செப்டம்பர் 11ம் தேதி மாநில அளவில் எல்லா அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பு மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனக்  கூறியிருந்தார்.

அதன்படி இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பதவி விலக வலியுறுத்தி மாநில அளவில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை விடியா அரசின் காவல்துறை கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கைது செய்யப்பட்டார். அவர் இது பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஸனாதன தர்மத்தை காப்போம் என்றதால் பாஜக வினர் கைது செய்யப்பட்டுள்ளோம். ஆனால்  சனாதனவாதிகளை மலேரியா, டெங்குஆகிய கொசு மருந்து கொண்டு கொள்ளுவோம் என்ற இந்து விரோதி உதயநிதிக்கு  சல்யூட் அடிப்பார்கள் எனக்  குறிப்பிட்டுள்ளார்.

மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பதிவு: சேகர்பாபு பதவி விலக கோரியும், கடலூரில் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்டிருக்கிறோம். இதில் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் கோவிலனூர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம்:

 திண்டுக்கல் நகரில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக பாஜக சார்பாக  நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  நிர்வாகிகள், தொண்டர்கள் கைதாகினர்.

கே.பி.ராமலிங்கம், மாநில துணைத்தலைவர் பதிவு: இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்தும் பதவி விலகக் கோரியும், நாமக்கல் மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டத்தில் மாவட்ட தலைவர், மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் உட்பட பல தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கைதானார்கள்.

விருதுநகர் மாவட்டம்:

விருதுநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா தலைமையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்துக்கள் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்படும் முதல்வர் மகன் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பதவி விலக வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தி தேச பக்தர்கள் கைதானார்கள். இவர்களுடன் விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு துறவியர் பேரவை அமைப்பாளர் சரவண கார்த்தியும் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம்:

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து பதவி விலகக் கோரியும் இன்று (செப்டம்பர் 11) ராணிப்பேட்டை, ராஜேஸ்வரி தியேட்டர் அருகில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை கைது செய்தது காவல்துறை. மாவட்ட தலைவர் உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கைதானார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம்:

கன்னியாகுமரி மாவட்டம் பாஜக சார்பாக இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கைதானார்கள்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்  லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று திமுக அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரையும் கருத்து சுதந்திரம் பேசும் திராவிட மாடல் அரசு கைது செய்து வைத்திருக்கிறது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top