ஆளுநரை சீண்டாதிங்க: திமுகவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அட்வைஸ்!

எந்த பிரச்னையையும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பேசி தீர்த்துக் கொள்வதுதான் முறை. சண்டையிட்டு எதையும் சாதிக்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜனவரியில் என் முன் என் மக்கள் யாத்திரை முடியும்போது, தமிழகத்தில் ஒரு புரட்சி ஏற்படும்.நடை பயணத்தின் போது, பகவத் கீதையை விட பைபிள்களும் குர்ஆன்களும் தான் அதிகமாக பரிசாக வந்தன. பாஜக ஒரு தரப்பினருக்கான கட்சி அல்ல என்று பிம்பம் உடைக்கப்பட்டு, அனைவருக்கும் ஆன கட்சி என்று உண்மை வெளிப்பட்டிருக்கிறது. இந்த நடைபயணத்தில், நல்ல எண்ணை கையில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் என்னுடன் நடந்து வந்துள்ளனர். 

அப்துல் கலாம், அண்ணாதுரை, சிவன், வீரமுத்துவேல் என பல தமிழர்கள் இதற்காக பங்காற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் தேசிய தலைவர்கள்.சமுதாய ரீதியாக திமுக பேசுகிறது, ஒரு சாதியை இழிவு படுத்துகிறது. எல்லோருக்கும் சாதி அடையாளம் கொடுப்பது அருவருக்கத்தக்க செயல். 

 ‘சந்திரயான் – 3’ திட்டத்தால் பாரதியாரின் கனவு நிறைவேறியுள்ளது. இதுவரை எந்த ஒரு நாடும் செல்லாத நிலவின் தென் துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்துள்ளது.

 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுகணை தளம் தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினத்திற்கு வர வேண்டியது. அன்றைய அரசு சரியான ஒத்துழைப்பு வழங்காததால் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு சென்றது. இப்போதும் குலசேகரபட்டினத்தில் இரண்டாவது ஏவுகணை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தையாவது செயல்படுத்த தி.மு.க., அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.காவிரி பிரச்சனைக்கு முதல்வர் மு க ஸ்டாலின் தான் காரணம். இதில் இடியாப்பச் சிக்கலை  உருவாக்கி அவர் ரசிக்கிறார். 

‘நீட்’ தேர்வு மசோதாவில் ஆளுநரின் பங்கு எதுவும் இல்லை. ஜனாதிபதி தான் முடிவெடுக்க முடியும். திமுகவினர் ஆளுநரை விமர்சித்து பேசும் முறை சரியானது அல்ல. அநாகரிக பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.

திமுகவினரின் சவாலை ஏற்று ஆளுநர் பீஹார் தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால், அவரை எதிர்த்து அங்கு சென்று திமுகவால் போட்டியிட முடியுமா? வெற்றி பெற முடியுமா? ஜனநாயக முறையில் பிரச்னையை ஆளுநருடன் பேசி தீர்த்துக் கொள்வதுதான் முறை. சண்டையிட்டு எதையும் சாதிக்க முடியாது. ஆளுநரிடம் வம்பிழுக்கக் கூடாது. ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவதால் எதுவும் நேரப் போவது இல்லை. காவலர்களுக்குதான் தலைவலியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top