தேச பாதுகாப்பில் சிகரம் தொட்ட ஒன்பது ஆண்டுகால மோடி அரசு! 

சுவர் இன்றி சித்திரம் இல்லை!

தேச பாதுகாப்பின்றி தேசம் எப்படி இருக்க முடியும்?

”எல்லையில் சாலை வசதிகள், தடுப்பு சுவர்கள், சுரங்க பாதைகள், விமான, கெலிகாப்டர் தளங்கள், இதர ராணுவ கட்டுமானங்கள் என எதுவுமே நமக்கு தேவையில்லை! அப்படியெல்லாம் இல்லாமல் இருப்பதுதான் நமக்கு பாதுகாப்பு! சீனாபோல் நாம் பெரிய நாடல்ல” என்று நாடாளுமன்றத்தில் 2013ல் செப்டம்பர் 6 ம் தேதி சொன்னவர் காங்கிரசின் ராணுவ அமைச்சர் அந்தோனி!

இந்த 9 ஆண்டுகள் நரேந்திரமோடியின் ஆட்சி காலத்தில் உலகத்திலேயே மிக உயரமான 10,000 அடி உயரத்தில் 9.2 கிலோமீட்டர் நீளமான அடல் சுரங்கப்பாதை உட்பட, தடுப்பு சுவர்கள், பாலங்கள், சாலைகள், தளங்கள், கட்டிடங்கள், ராணுவ தளவாட கிடங்குகள், பயிற்சி தளங்கள், ரகசிய மறைவிடங்கள் என 184 கட்டுமானப்பணிகள் சீன எல்லைப்பகுதிகளில் மலை முகடுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனையாகும்!

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மே மாதம் 26 ம் தேதி பதவி ஏற்றபோது இந்தியாவில் இருந்து ராணுவ தளவாடங்கள் உலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவது, ஆயிரம் கோடியாக இருந்தது!

இன்று ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதி அளவு 18000 கோடியாக உள்ளது!

18 மடங்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி உயர்ந்திருக்கிறது!

இப்போதும் 180 பணிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன!

அங்கு வாழும் மக்களுக்கு வசதியாகவும், ராணுவம் விரைந்து எல்லைக்கு செல்லும் வகையிலும், நவீன தளவாடங்கள் விரைந்து எல்லைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் இந்த சாதனைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன!

எல்லையில் சாலை வசதிகள்! சுரங்க சாலைகள்! விமான ஹெலிகாப்டர் தளங்கள்! ராணுவ நிலைகள்! எதிரிகளோடு சமரசமில்லாத நிலைப்பாடுகள்!

அவன் ஒரு அடி உள்ளே வர நினைத்தால் நாம் பத்து அடி எல்லையை விரிவுபடுத்துவோம் என்னும் நிலைப்பாடு!

கால்வானில் 20 ராணுவவீரர்களின் மரணத்திற்கு காரணமான சீன ராணுவத்தினர் 45 க்கும் மேற்பட்டவர்களை உடனே பலியிட்டோமே!

பலியிட்ட சூட்டோடு சூடாக, 1962 யுத்தத்தில் சீனா கைப்பற்றிய மலைக்குன்றுகளில் நமது ராணுவத்தை நிறுத்தியிருக்கிறோம்!

மலை முகடுகளை விட்டு வெளியேறுங்கள், என்று சீனா நம்மிடம் இப்போது கெஞ்சுகிறது, நாமோ, “இந்த மலை முகடுகள் எங்களுக்கு சொந்தமானதுதான், நீங்கள் 1962 ல் அபகரித்தீர்கள், நாங்கள் இப்போது எங்கள் பூமியை கைப்பற்றியுள்ளோம்! இதை மீண்டும் விட்டுத்தர முடியாது” என சொல்லிவிட்டோம்!

இப்போது பேச்சுவார்த்தைக்கு சீனா நம்மிடம் கெஞ்சுகிறது!

இதுதான் 9 ஆண்டுகால தேச பாதுகாப்பு சாதனை!

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் ஆட்சி காலத்தில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது!

எனினும் அடுத்து வந்த காங்கிரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் அது பிந்தங்கியது!

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் மே மாதம் 26 ம் தேதி பதவி ஏற்றபோது இந்தியாவில் இருந்து ராணுவ தளவாடங்கள் உலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவது, ஆயிரம் கோடியாக இருந்தது!

இன்று ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதி அளவு 18000 கோடியாக உள்ளது!

18 மடங்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி உயர்ந்திருக்கிறது!

ரபேல் சாதனை!

ரபேல் விமானம் பிரான்ஸ் டசால்ட் நிறுவனத்திலிருந்து வாங்கியது மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாகும்!

ராணுவ தளவாடங்களுக்கு நமது ராணுவத்தில் பற்றாக்குறை இருக்கிறது! ரபேல் விமானத்தை நாம் வாங்கவேண்டும் என ராணுவ அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்!

காங்கிரஸ் காரர்களும் அதை வாங்கப்போவதாக 2007 ல் கொள்கை முடிவு எடுத்தார்கள்! பிரான்சுக்கு போனார்கள்! விலை பேசினார்கள்! ஆனால் 2014 ல் மோடி அரசு பதவி ஏற்கும் வரை எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை!

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் 2014 லேயே பிரான்ஸ்சுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்!

ரபேல் விமானம் வாங்கும் திட்டம் எந்த நிலையில் இருக்கிறது? என்று மோடி கேட்டார்!

காங்கிரசார், அதிகமான அளவு அதாவது 20 விழுக்காடுகள் கமிஷன் கேட்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் பிரதமரிடம் குற்றம்சாட்டியதாக சொல்லப்படுகிறது!

ஒரு பைசாக்கூட கமிஷன் தேவையில்லை என்ன விலைக்கு தருவீர்கள் என மோடி கேட்டார்!

ரபேல் விமானம் வாங்கப்பட்டது!

பிரதமர் நரேந்திரமோடியும் நம்மைப்போல கமிஷன் அரசியல்வாதியாகத்தான் இருப்பார் என தப்பு கணக்கு போட்ட ராகுல் அதிக விலை கொடுத்து ரபேல் விமானத்தை வாங்கிவிட்டார்கள் என வழக்குப்போட்டார்!

ரபேல் விமானத்தில் என்னென்ன ரகசிய ஆயுதங்கள் பொருத்தும் வகையில் அது தயாரிக்கப்பட்டது? என்னும் விவரத்தை கேட்டார் ராகுல்!

அதையெல்லாம் எல்லோரிடமும் சொல்ல முடியாது. அம்மாதிரி ஆயுதங்கள் ரகசிய ஒப்பந்தத்தில் அடிப்படையில் ரபேலில் இணைக்கப்பட்டுள்ளன!

நீதிபதிக்கு வேண்டுமென்றால் உறையில் இட்டு சீல் செய்து அந்த விவரத்தை தரலாம், ராகுலிடம் தரமுடியாது என்னும் வகையில் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது!

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சீலிடப்பட்ட உறையில் விவரத்தினை வாங்கி படித்துப்பார்த்துவிட்டு, இதையெல்லாம் ராகுலிடம் தெரிவிக்கக்கூடாது என்னும் அரசின் நிலைப்பாடு சரிதான் என்றனர்!  காரணம் என்னவாக இருக்கும்? வாசகர்களுக்குத் தெரியாததா?

ரபேல் விமானம் மிக குறைந்த விலையில்தான் 10 சதவிகிதம் குறைவாகத்தான் வாங்கப்பட்டுள்ளது, என பாராட்டப்பட்டது அரசு!

இதுவரை 25 க்கும் மேல் ரபேல் விமானம் இந்தியாவுக்கு வந்துவிட்டது, இன்னும் வந்துக்கொண்டிருக்கிறது!

ரபேல் விமானத்தின் தொழில் நுட்பத்தை இந்தியாவிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டும், வருங்காலத்தில் இந்தியாவிலேயே விமானம் தயாரிக்கும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரபேல் வரவேண்டும்! என்றெல்லம் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன!

ரபேல் மட்டுமல்லாமல் பல வீரியம் மிக்க, தற்கால தொழில் நுட்ப திரன் கொண்ட ராணுவ தளவாடங்களை தயாருக்கும் 33 ராணுவ தளவாட தயாரிப்பு ஆலைகள் மேக் இன் இந்தியா திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில், இந்த 9 ஆண்டுகளில் துவக்கப்பட்டுள்ளது!

அதுமட்டுமின்றி ராணுவ தொழில் நுட்ப கேரிடார் என அழைக்கப்படும் ராணுவ தொழில் பூங்காக்கள் தமிழகத்திலும் உத்திரபிரதேசத்திலும் துவக்கப்பட்டுள்ளது!

அவசர நிலை ஏற்படின், பிரதான சாலைகளில் கூட இன்று விமானங்கள் இறங்க முடியும் என்பது எப்பேர்ப்பட்ட பாதுகாப்பு சாதனை!

சட்டங்களையும் பட்டங்களையும்தான் பெண்களுக்கென பாரதி சொன்னான்! ஆனால் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பெண்களை ராணுவத்தில் சேர்த்து அவர்களை யுத்த விமானங்களை இயக்கும் மாவீரர்களாகவும், ராணுவ பிரிவுகளுக்கு தலைவர்களாகவும் நடைமுறைப்படுத்தியுள்ளார்!

நமது ராணுவத்தை பார்த்து உலகே அச்சம் கொள்ளும் அளவுக்கு, இப்போது நம் உலக தலைவர் நரேந்திர மோடி ஆச்சியில் நம் ராணுவம் வலிமைப்பட்டுள்ளது என்பது மிகைப்படுத்தப்படாத செய்தியாகும்!

– குமரி கிருஷ்ணன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top