அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்!

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி இன்று (ஏப்ரல் 29) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ஸ்மிருதி இராணி சுமார் 200 மீட்டர் தூரம் சாலை பேரணி நடத்தினார். பேரணியில் உத்தரபிரதேச அமைச்சர் மயங்கஷ்வர் சரண் சிங் மற்றும் ஸ்மிருதி இராணி கணவர் ஜுபின் இராணி ஆகியோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் வசம் இருந்த அமேதி தொகுதியில், கடந்த 2019 தேர்தலில் ராகுல் காந்தியை சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இராணி தோற்கடித்தார். தற்போதைய தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் ஸ்மிருதி இராணி மீண்டும் களம் காண்கிறார். அதேநேரம், இத்தொகுதிக்கு காங்கிரஸில் இன்றுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மீண்டும் பாஜக வசமே அமேதி தொகுதி வரும் என தொண்டர்கள் ஆரவாரத்துடன் கூறியுள்ளனர். அமேதி தொகுதியில் 5ம் கட்டமாக மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top