பாரம்பரிய சொத்து வரி, காங்கிரஸ் போட்ட அடுத்த குண்டு…

நடுத்தர,  மேல் நடுத்தர வர்க்கத்திலிருந்து தேவைக்கு அதிகமான சொத்தை பிடுங்கி, சிறுபான்மையினருக்கு வழங்குவதாக கூறிய காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி சர்ச்சை  ஓய்வதற்குள் அடுத்த பிரச்சினையில்  மாட்டிக்கொண்டுள்ளது அக்கட்சி. 

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவில் உள்ளதை போன்று பாரம்பரிய சொத்துவரியை ( Inheritance Tax )  கொண்டு வந்து ஒருவர் இறந்த பின் அவரது சொத்துகளில்  55 சதவீதத்தை அரசு எடுத்துக்கொண்டு 45 விழுக்காடு சொத்தை மட்டுமே அவரது சந்ததியினருக்கு வழங்கப்படும் என்பது போன்ற சட்டம் இந்தியாவுக்கும் தேவைப்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் கொள்கை வகுப்பு பிதாகர் சாம் பிட்ரோடா கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ நாடு முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆதரவாளர்களே ஏற்கனவே பிரதமர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலையில், இப்படியே வாயைத் திறந்து வைக்கிறார் என்று பதறுகிறார்கள். 

ஏற்கனவே,  பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் 21ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் , ” நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தின் செல்வத்தை குடும்பம் வாரியாக கணக்கிட்டு ஏழைகளுக்கு மறுபங்கீடு செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி  கூறியுருக்கும் வாக்குறுதி ஆபத்தானது மட்டுமல்ல மிகவும் கவலை அளிக்கிறது. இது மாவோயிஸ்ட் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதன் தலைவர் சாம் பிட்ரோடா மீண்டும் வாய் கொடுத்து மாட்டி இருப்பது கிடைக்கும் 35, 40 சீட்டுக்கு கூட வேட்டுவைத்து விடும் என காங்கிரசார்  அலறுகிறார்கள். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top