காந்திநகரில் வேட்புமனு தாக்கல் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, காந்திநகர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அமித்ஷாவுடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உடனிருந்தார். வேட்புமனுத்தாக்கலின் போது பாஜக தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

2019 மக்களவைத் தேர்தலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 557,014 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சியி சாவ்தாவை தோற்கடித்து மகத்தான வெற்றியைப் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, காந்திநகரில் போட்டியிடுவதில் பெருமிதம் கொண்ட அமித்ஷா, இந்தத் தொகுதியை கடந்த காலங்களில் பாஜக பிரமுகர்கள் பிரதிநிதித்துவப்படுத்தியதாகக் கூறினார்.

“இந்த தொகுதியை எல்.கே. அத்வானி, அடல்ஜி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர் என்பதும், நரேந்திர மோடியே வாக்காளராக உள்ள தொகுதி என்பதும் எனக்கு பெருமையாக உள்ளது. இந்த தொகுதியில் 30 ஆண்டுகளாக எம்எல்ஏவாகவும், எம்பியாகவும் இருந்தேன். இப்பகுதி மக்கள் என் மீது அளவற்ற அன்பைக் கொடுத்துள்ளனர்” என்று அமித்ஷா கூறினார்.

“நான் ஒரு காலத்தில் பூத் தொழிலாளி, இந்த தொகுதியில் இருந்து நான் பாராளுமன்றத்திற்கு வந்தேன். காந்திநகரில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.22,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

2024 மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 நாடாளுமன்றத் தொகுதிகளில் நேற்று (ஏப்ரல் 19) நடந்து முடிந்தது. இன்னும் மற்ற 6 கட்டங்கள் தேர்தல் முடிந்த உடன் ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top