திமுக வேட்பாளர் ராசா காரில் பணப்பெட்டிகள்: சோதனை செய்யாமல் அனுப்பிய பறக்கும்படை!

நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராசா காரில் ஏராளமான பெட்டிகள் இருந்ததாகவும், அதனை சோதனை செய்யாமலேயே பறக்கும்படையினர் அனுப்பி வைத்ததாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. அந்த பெட்டியில் பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் நோக்கில், பல்வேறு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே நகர் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்களின் வாகனங்களை பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்யாமலே அனுப்பி வருகின்றனர்.

அதே போன்று நேற்று நீலகிரி மக்களவை தொகுதிகுட்பட்ட ஊட்டிக்கு திமுக வேட்பாளர் தனது படையுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்யாமல் அனுப்பியுள்ளனர். அந்த காரில் ஏராளமான மர்மப்பெட்டிகள் இருந்துள்ளது. எனவே பெட்டிக்குள் கோடிக்கணக்கான பணம் எடுத்துச்சென்றிருக்கலாம் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

சமீபத்தில் ஊட்டிக்கு வந்த பஞ்சாப் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை சோதனை செய்தபோது அவர்களிடம் இருந்த 67 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அவர்கள் கண்ணீர் விட்டு கெஞ்சியும் அதிகாரிகள் பணத்தை திரும்பகொடுக்காமல் அன்று இரவு வரை இழுத்தடித்தனர். பல தரப்பில் இருந்து கண்டனம் எழுந்த பின்னரே சுற்றுலாப் பயணிகளின் பணத்தை ஒப்படைத்தனர்.

ஆனால் காரில் ஏராளமான பெட்டிகளை கொண்டு சென்ற ராசாவின் காரை சோதனை செய்யாமல் அனுப்பியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top