இந்தியாவிடம் கடன் கேட்டு கெஞ்சும் மாலத்தீவு அதிபர்!

மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அந்நாட்டு அதிபர் முகமது மூயிஸ், இந்தியா எங்களது  நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் என ‛ஐஸ்’ வைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி இந்தியாவுக்கு 400.9 மில்லியன் டாலர்களை கடனாக மாலத்தீவு திருப்பிச் செலுத்த வேண்டி உள்ளது. மாலத்தீவு அதிபராக மூயிஸ் பதவியேற்றது முதல், அவர் சீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததுடன் இந்தியா எதிர்ப்பு நிலையை கடைப்பிடித்தார்.

அந்நாட்டில் உள்ள இந்திய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என கெடு விதித்தார்.

அந்நாட்டு அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தனர். இதனால் இந்தியாவில் இருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்தது. இதனால் அந்த அமைச்சர்களை நீக்கி மூயிஸ் உத்தரவிட்டார்.
மேலும் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்திய மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினார். அது மட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் உள்ள தீவான லட்சத்தீவுக்கு சென்று ஒரே ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். ஒட்டுமொத்த உலக நாடுகளும் லட்சத்தீவை பற்றி பேசத்துவங்கினர்.

இதனால் மாலத்தீவுக்கு செல்வதை வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் தவிர்க்கத் தொடங்கினர். இதில் சுற்றுலா வருமானம் வெகுவாக குறைந்ததால் மாலத்தீவு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மூயிஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில், அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு மாலத்தீவு அதிபர் மூயிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மாலத்தீவுக்கு மிகப்பெரிய உதவி வழங்குவதில் இந்தியா பெரிய பங்கு வகித்தது. பெரிய எண்ணிக்கையிலான திட்டங்களை செயல்படுத்தியது. எங்களின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும். அதில் எந்த பிரச்னையும் இல்லை.

இந்தியாவிடம் மாலத்தீவு கடன் பெற்றுள்ள நிலையில் அந்தக் கடன் சுமையை மாலத்தீவு பொருளாதாரத்தால் தாங்க முடியாது.

எனவே கடனை குறைத்தல் அல்லது கடனுக்கான வட்டி விகிதங்கள், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை திருத்தியமைத்தல் போன்ற வழிகளில் மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும். இதை இந்திய அரசுச் செய்யும் என நம்புகிறேன். மாலத்தீவின் பொருளதார நிலைக்கு ஏற்ப கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.  

வரும் காலங்களில் இந்தியாவை பகைத்துக்கொண்டு அண்டை நாடுகள் வாழ முடியாது என்பதற்கு மாலத்தீவு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. நம்மைப் பகைத்துக் கொண்டு சீனாவை நாடிச் சென்றவர்கள் , குறுகிய காலத்திலேயே நமது உதவியை நாடுகிறார்கள் என்றால் நமது நாட்டின் வளர்ச்சியை பிரதமர் மோடி எந்த அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறார் என்பதை இதில் இருந்தே அறிந்து  கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top