தி.மு.க.வின் முகத்திரை கிழிந்தது.. 51 சதவீத மாணவர்கள் பயிற்சி வகுப்பிற்கு செல்லாமலேயே நீட் தேர்வில் தேர்ச்சி!

நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு சேருகின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் திமுக அதன் கூட்டணி கட்சிகள் பொய்யான பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.

நீட் தேர்வால் மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோகிறது எனவும், நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்கு தனியார் பயிற்சி மையங்கள் கட்டாயம், அதற்காக பல லட்சம் செலவாகிறது என திமுக கூறி வருகிறது.

இதன் பின்னணியில், அவர்கள் அனைவருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி இருப்பதே இதற்கு காரணம். நீட் தேர்வு இல்லை என்றால் கோடிக்கணக்கான பணத்தை மாணவர்களிடம் இருந்து வாங்க முடியும். தற்போது நீட் தேர்வு வந்ததால் ஒரு ரூபாய் கூட வாங்க முடியவில்லையே என்ற விரக்தியில் அவர்கள் உள்ளனர்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஒரு ரூபாய் கூட லஞ்சமாக கொடுக்காமல் மருத்துவ படிப்பை முடித்து வெளியே வரலாம். இந்த நல்ல திட்டத்தின் மூலம் நாட்டில் லட்சக்கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி வருகிறது. இதனை தாங்கிக்கொள்ள முடியாததால் திமுக நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.

இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின், தொழில்பிரிவு மாநில துணை தலைவர் செல்வகுமார் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்வு எழுதி வெற்றி பெற தனியார் கோச்சிங் சென்டருக்கு கட்டாயம் போக வேண்டும், பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும், அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கட்டுகதையை திமுக தொடர்ந்து பரப்பி வருகிறது.

உண்மையில், நடப்பு கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த 6247 மாணவர்களில் 51% மாணவர்கள் எந்தவிதமான கோச்சிங் சென்டருக்கும் போகாதவர்கள் என்பது ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top