குண்டர் சட்டத்தில் கைதான விவசாயி அருளுடன் முதல்வர் ஸ்டாலின்: இணையத்தில் வைரலாகும் போட்டோ!

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள விவசாயி, முதல்வர் ஸ்டாலினுடன் போராட்டத்தில் பங்கேற்ற போது எடுத்த புகைப்படத்தை தற்போது விவசாயிகள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், மேல்மா கிராமத்தில் சிப்காட் விரிவாக்கத்திற்காக விளை நிலங்களை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 126 நாட்கள் போராடிய விவசாயிகள் 20 பேரை விடியாத திமுக அரசு கைது செய்தது.

இதில் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஏழு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இது பற்றிய தகவல் வெளியே தெரிந்ததும் திமுக அரசுக்கு விவசாயிகள் உட்பட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்

இதன் பின்னர் எதிர்ப்புக்கு பயந்து போன ஸ்டாலின் 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டார். போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் மட்டும்  ரத்து செய்யப்படவில்லை

இந்த நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கென 100 விவசாய சங்கங்கள் சேர்ந்து, போராட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த போராட்ட குழு வாயிலாக சென்னை உள்பட 24 மாவட்டங்களில் கடந்த  21ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையே கடந்த 2021 பிப்ரவரி மாதம் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஈரோடு சென்ற ஸ்டாலின் அங்கு விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். அந்த போராட்டத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அருள் பங்கேற்றுள்ளார்.

முதல்வர் அருகே அவர் அமர்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டு, விவசாயியை தீவிரவாதி போல சித்தரிக்கலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது அவர் உங்களுக்கு ஹீரோ, நீங்கள் ஆளும் கட்சி ஆகிவிட்டால் அவர் உங்களுக்கு வில்லனா, இதெல்லாம் அநியாயமான நிலைப்பாடு என்றும் விவசாயிகள் கேள்விகளுக்கு எழுப்பி வருகின்றனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top