நீதிமன்றத்தில் மண்டியிட்ட உதய், டிரெண்டான ஹேஷ்டேக்!  

சமூக வலைத்தளங்களில் கடந்த 17ம் தேதி மண்டியிட்ட உதய் என்ற, ஹேஷ்டேக் அதிகம் பகிரப்பட்டது. சனாதனம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது அமைச்சராக இல்லை, தனி நபராகப் பேசிவிட்டேன் என நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், கடந்த செப்டம்பர் 2ம் தேதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் உதயநிதி பேசுகையில், சிலவற்றை நாம் ஒழிக்க தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்கக் கூடாது, ஒழித்துக்கட்ட வேண்டும். அதுபோலத் தான் சனாதனம். அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும் என்றார்.

இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அமைச்சராக இருப்பவர் அரசியலமைப்புக்கு எதிராகப் பேசியதாக உதயநிதி, சேகர்பாபு, திமுக எம்.பி., ராசா ஆகியோர் மீது சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த அக்டோபர் 16ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி தரப்பில் தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்..

ஆனால், அந்த மாநாட்டுக்கான அழைப்பிதழில், வாழ்த்துரை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அமைச்சர் என்ற முறையிலேயே அவரும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை என அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து (அக்டோபர் 17) அனைத்து சமூக ஊடகங்களிலும்  , ‘மண்டியிட்ட உதய்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் செய்யப்பட்டது. அதில், ‘ஆறாம் விரல்’ என்ற பெயர் கொண்டவர் அமைச்சர் லஞ்சம் வாங்கினாரா, இல்லையா? லஞ்சம் வாங்கியது உண்மைதான் யுவர் ஆனர். ஆனால் அதை அமைச்சராக வாங்கவில்லை. ‘தனிப்பட்ட முறையில் தான் வாங்கினார். ஆகவே, அமைச்சர் குற்றமற்றவர் என்று அறிவிக்கும்படி, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’ எனக், கிண்டல் அடித்துள்ளார்.

இது போன்ற எண்ணற்ற கிண்டல் பதிவுகள் உதய நிதியை கலாப்பதாக உலா வந்தன. 

அன்று ஆட்சியே போனாலும் பரவாயில்லை. சனாதனத்தை ஒழிப்பேன் என்றும்  சனாதானத்தை  ஒழிக்கத்தான் தான் திமுக உருவானது என்றெல்லாம் கூறிவிட்டு இப்படி பல்டி அடித்துவிட்டாரே இதுதான் திராவிட மாடல் வீரமா என்று உதயநிதிக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top