பழனி கோயிலுக்கு வந்த பக்தரை தாக்கிய பாதுகாவலர்கள்!

பழனி முருகன் கோயிலுக்கு வந்த பக்தர் குடும்பத்தை அறநிலையத்துறையின் கீழ் உள்ள பாதுகாவலர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு கடந்த செவ்வாய்கிழமை இரவு, திருப்பூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.  படிப்பாதை வழியாக கோயிலுக்குச்  செல்ல முயன்ற  அவரை பாத விநாயகர் கோயில் அருகே இருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி, நேரம் முடிந்து விட்டது; மேலே யாரும் செல்ல முடியாது என கூறி உள்ளனர்.

தரிசன நேரம் இன்னும் இருக்கும் நிலையில் தங்களைத் தடுத்த காவலர்களிடம் வெகு தொலைவில் இருந்து வந்துள்ளதால் அனுமதிக்குமாறு அவர் வெண்டியுள்ளார்.  அது எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. இப்போது அனுப்ப முடியாது என்ற ஒத்தை வார்த்தையை பாதுகாவலர்கள் கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் பக்தர் அவர்களிடம் ஏன், எதற்காக கோயில் உள்ளே அனுமதிக்க முடியாது என்ற கேள்வியை  எழுப்பியுள்ளார்.

சரியான பதில் இல்லாத நிலையில் அவரைக் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து அறநிலையத்துறையின் லட்சணம் இதுதானா என்ற கேள்வியை பக்தர்கள் எழுப்பி வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து, பாதுகாவலர்களான செல்வ கணபதி, ராஜசேகர் தங்கவேல், கருப்பையா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கோயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்தின் இந்த அடாவடித்தனத்துக்கு, ஆலய சீர்கேட்டை ஊக்குவிக்கும் இந்து நாத்திக திமுக அரசே காரணம் என்று பக்தர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top