பண்டிட் தீனதயாள் 107வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, அமித்ஷா, அண்ணாமலை புகழாரம்!

பண்டிட்  தீனதயாள் உபாத்யாயாவின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் புகழாரம் சூட்டியுள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது: 

பிரதமர் நரேந்திர மோடி:

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயவின் ஆளுமையும் பணியும் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும். அவரால் உருவானது அந்த்யோதயா திட்டம்.

தனது முழு வாழ்க்கையை அன்னை பாரதத்தின் சேவைக்காக அர்ப்பணித்த  அவரது பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையான அஞ்சலி. 

மத்திய உள்துறை அமித் ஷா:

பண்டிட் தீன்தயாள் உபாத்யாய ஜியின் வாழ்க்கை தேச சேவை மற்றும் அர்ப்பணிப்பின் சிறந்த அடையாளமாகும். மனிதகுலத்தின் நலன் என்று வரும் போதெல்லாம், பண்டிட் ஜியின் ஒருங்கிணைந்த மனிதநேயத் தத்துவத்தின் கொள்கை, துருவ நட்சத்திரத்தைப் போல முழு மனிதகுலத்தையும் எப்போதும் வழிநடத்தும்.

உணவு முதல் சிந்தனை  வரை தன்னம்பிக்கை மட்டுமே ஒரு தேசத்திற்கு உலகில் அதன் இடத்தைக் கொடுக்க முடியும் என்று அவர் நம்பினார். இன்று இந்தத் தீர்மானம் சுயசார்பு இந்தியாவின் அடிப்படைக் கருத்தாகும். நம் அனைவருக்கும் உத்வேகம் அளித்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிகள்.

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா:

ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் முன்னோடியும் பாரதீய ஜனதாவின் உத்வேகமுமான மதிப்பிற்குரிய பண்டிட் தீன்தயாள் உபாத்யாய ஜியின் பிறந்தநாளில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
உங்களின் துறவற வாழ்க்கையும் அந்தியோதயாவின் உறுதியும் இந்திய சமுதாயத்தை உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கு எங்களின் உத்வேகமாக எப்போதும் இருக்கும். 

மாநிலத் தலைவர் அண்ணாமலை:

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஒரு அரசியல் புரட்சியாளர், ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் ஆதரவாளர், ஏழைகளை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக அறியப்பட்டவர். பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஒவ்வொரு தேசியவாதிக்கும் உண்மையான உத்வேகம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top