தமிழகத்துக்கு மத்திய அரசு செய்தது என்ன? வெள்ளை அறிக்கை வெளியிட்டார் மாநிலத்  தலைவர் அண்ணாமலை!

தமிழகத்துக்கு மத்திய அரசு செய்த திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு போதுமான திட்டங்களை நிறைவேற்றித்  தருவதில்லை என்றும் குறைவான நிதியே வழங்கப்படுகிறது என்றும்  முதலமைச்சர் ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் வேளையில்  அண்ணாமலை அதற்குப்  பதில் அளித்துள்ளார். 

அதன்படி பாஜகவின் 9 ஆண்டு ஆட்சிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் நலனுக்காக நிறைவேற்றி உள்ள திட்டங்கள் என்னென்ன, வழங்கப்பட்ட நிதி எவ்வளவு

  என்று வெள்ளை அறிக்கை ஒன்றை  மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூக ஊடகத்தில் புதன்கிழமை வெளியிட்டார்.

அந்தப் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ.10.76 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்துள்ள அவர்,   திமுக, காங்கிரஸ் கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், வரலாறு காணாத ஊழலால் தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதைத் தவிர வேறு என்ன கிடைத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தனது வெள்ளை அறிக்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக வெளியிட்டு,  இரண்டு மொழிகளிலும் அறிக்கையைப் படிப்பதற்கான இணைப்புகளை தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த  அறிக்கையில், மத்திய அரசு தமிழகத்துக்கு வரியை பகிர்ந்து அளித்த வகையில், ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்து 962 கோடி, பிரதமரின் முத்ரா வங்கிக் கடன் திட்டத்தில் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 603 கோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ரூ.1,684.37 கோடி, சாலையோர சிறு வணிகர்கள் கடன் திட்டத்தில் ரூ.1,538.89 கோடி, நாடாளுமன்றத் தொகுதி சிறு வணிகர்கள் கடன் திட்டத்தில் ரூ.1,538.89 கோடி, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாடுத் திட்டத்தில் ரூ.1,538.89 கோடி, எம்.எஸ்.இ.நிறுவனங்களுக்கான கடன் திட்டத்தில் ரூ.26,669 கோடி, விவசாயிகளுக்கு ரூ.8,594.86 கோடி, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.48,506 கோடி, பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.16,335.95 கோடி, பொலிவுறு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.5,209 கோடி, அம்ருத் பாரத் திட்டத்துக்கு ரூ.4,288.18 கோடி உள்பட பல்வேறு திட்டங்களுக்கு மொத்தம் பத்து லட்சத்து 70 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொரான தடுப்பூசிகள் மட்டும் 12.75 கோடி வழங்கப்பட்டு உள்ளது எனவும் தகவல் கூறியுள்ளார். 

அண்ணாமலையின் இந்த வெள்ளை அறிக்கை முதல்வர் ஸ்டாலினின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து விட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் இதை ஒப்புக் கொள்வாரா அல்லது இதற்கும் பொய்யான மறுப்பு கொடுப்பாரா என்ற கேள்வியை பொது மக்கள் எழுப்பி வருகின்றனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top