பாரதப் பண்பாடுப் பெயர் சூட்டுவது பா.ஜ.க.வின் கலாசாரம்!

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரும் சரி, அதற்கு முன்னர் மறைந்த முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலத்திலும் சரி,  எப்போதுமே பாஜக அரசு, திட்டங்களுக்கு பாரதப் பண்பாடுப் பெயர் சூட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறது.

சமீபத்தில் நாடு முழுவதும் தொடங்கப்பட்ட அதிவேக சொகுசு ரயிலுக்கு ‘வந்தே பாரத்’ என பெயர் சூட்டப்பட்டது. இது அனைவரையும் கவர்ந்துள்ளது.

எழுக இந்தியா திட்டம், ஒருங்கிணைந்த கங்கை பாதுகாப்புத் திட்டம், தொடங்கிடு இந்தியா,  என இப்படி பல பெயர்களை  சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில்,  சந்திரயான் 3, நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரை இறங்கியதற்கு காரணமான இஸ்ரோவின்  பெண் விஞ்ஞானிகளை போற்றுகின்ற வகையில் நிலவில் சந்திரயான் 3 இறங்கிய இடம் சிவ சக்தி முனை என்று அழைக்கப்படும் என அறிவித்தார். 

அடுத்து ஆகஸ்ட் 23 அன்று தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்றும் 
சந்திரயான் 2 இடத்திற்கு திரங்கா முனை எனப் பெயர் இடுவதாகவும் அறிவித்தார். 

மாறாக 2008 இல்  சந்திரயான் 1 நிலவை தட்டிய இடத்திற்கு  ஜவஹர் முனை என்று பெயர் சூட்டிக்கொண்டது காங்கிரஸ் அரசு. எங்கும் எதிலும் குடும்பப் பெயர் சூட்டுவதை  கலாச்சாரமாக கொண்ட காங்கிரஸ் இப்போது சிவசக்தி என்றும் திரியங்கா என்றும் பெயர் சூட்டுவதை கேலி செய்கிறது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top