பயங்கரவாத  அச்சுறுத்தல்கள் இல்லை,  சுதந்திரமாக சுதந்திர தின விழாவை கொண்டாடிய ஜம்மு காஷ்மீர் மக்கள்!

370 நீக்கப்பட்டு, அரசின் பல்வேறு நல்லவித முன்னெடுப்புகள் காரணமாக பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காணாமல் போனதன் காரணமாக கடந்த காலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை அதிகாரிகள் இந்த ஆண்டு நீக்கினர். எனவே பல ஆண்டுகளுக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரின் பக்ஷி மைதானத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஆயிரக்கனக்கான மக்கள் ஒன்று கூடினர்.

இதற்கு முன்னர் சுதந்திர தினம், குடியரசு தினங்களின் போது மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் , நேற்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது சாலைகளை மறித்தபடி இரும்புக் கம்பி தடுப்புகள் இல்லாமல் இருந்தது ஸ்ரீநகரில் வசிக்கும் 1.5 மில்லியன் மக்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது.

உடனடியாக 
அனைத்து மக்களும் தங்கள் தங்கள்  கைகளிலும் மூவர்ணக் கொடிகளை ஏந்தியபடி பக்க்ஷி மைதானத்தில் கூடியிருந்தனர். அதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் வந்திருந்தனர்.

சுதந்திர தினவிழாவிற்கு வந்தவர்கள் புகைப்படங்கள் எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மொத்தத்தில் திருவிழாவை போன்று மக்கள் சுதந்திர தினவிழாவை கொண்டாடினர். பள்ளிகள், கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தது.

எவ்வித அசம்பாவித செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்காக போதுமான அளவில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சீராக இயங்கியது. ஜம்மு காஷ்மீரில் முக்கிய கொண்டாட்டம் நடந்த பக்க்ஷி மைதானத்தைச் சுற்றியிருந்த சில பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் சுதந்திர தினம், குடியரசு தினங்களின் போது தடைசெய்யப்படும் அலைப்பேசி மற்றும் இணையசேவைகள் மாநிலத்தில் மூன்றாவது ஆண்டாக தடை செய்யப்படவில்லை.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அச்சுறுத்தப்பட்டு வந்த தீவிரவாத செயல்களை முற்றிலும் ஒழித்து வருகிறது. அங்கு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதே போன்று வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் லட்சக்கணக்கான மக்கள் சென்று அழகிய இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top