கொள்கை  அல்ல, கொள்ளை சார்ந்த திராவிட மாடல் அரசு..!

> ஆலயங்களில்  முறைகேடு
> ஆவின் நிறுவனத்தில் முறைகேடு
> அதிகரிக்கும் செயின் பறிப்புகள்
> பாட்டிலுக்கு பத்து ரூபாய் கமிஷன்
> அனுமதி இல்லா பார்கள்
> கள்ளச் சாராயச் சாவுகள்
> நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கனிம வளக் கொள்ளைகள்
> தாறுமாறான மின்வெட்டுகள்
> கூரைகள் இல்லாப் பேருந்துகள்
> தினம் தினம் பாலியல் குற்றங்கள்
> தொடர்கதையாகிப் போன கொலை, கொள்ளைகள்..
> மாயமாகும் நெல் மூட்டைகள்
> சாப்பிட்ட பில்லுக்கு காசு கொடுக்க மறுத்து சண்டையிடும் உடன் பிறப்புகள், உடன்பிறப்புகளோடு இணைந்து விட்ட காவல் துறையினர்
> கட்டிடமில்லா, ஆசிரியரில்லா, தலைமையாசிரியர் இல்லா பள்ளிகள்
> ஊழல் மயமான அமைச்சர்கள்
> ஊழல் மயமான முதல் குடும்பங்கள்
> சந்தி சிரிக்கும் சத்துணவு ஊழல்கள்
> சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள்
> அதிகார அத்து மீறல்கள்
> கமிஷனுக்காக திட்டங்கள்
> கரப்சனுக்காக மெகா திட்டங்கள்
> அதிகரித்துவரும் சாதி மோதல்கள்
> ஆதிக்க ஜாதி மனப்பான்மையுள்ள அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள்
> நிறைவேற்றாத வாக்குறுதிகள்
> நிழல் மேயர்கள்
> நிழல் முதல்வர்கள்
திராவிட மாடல்  அரசின் ” சாதனைகளை ” இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். கோபத்தின் உச்சியில் இருந்து முதல்வர் சொன்ன, கொள்கை சார்ந்த கட்சி, கொள்கை சார்ந்த ஆட்சி என்றால் என்ன என்பதை  மேற்படி விஷயங்கள் நமக்குப் புரிய வைத்து விடும்.
தானே குற்றம் சாட்டிய குற்றவாளியை விடுவிப்பதற்கு, முதல்வர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் மாநில உரிமை, திராவிடப் பெருமை, சனாதன எதிர்ப்பு…ஆனால்
இந்த நிமிடம் வரை, அவராலும் அவரது கட்சியினராலும் அவரது கூட்டணி கட்சிகளாலும் செந்தில் பாலாஜியை குற்றமற்றவர் என்று சொல்ல முடியவில்லை. இது தானே உண்மை! பிறகு எதற்கு இந்த நாடகம் ?
பதட்டம் வேண்டாம் முதல்வரே, மாடல் அரசு மன்னிப்பு மடல் எழுதும் காலம் நெருங்கி விட்டது. அத்தனை முகமூடிகளும் கிழியும் காலம் வந்துவிட்டது.
தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம்  அதை நடத்திக் காட்டும்!

-நானா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top