ஜூலை 9 டி. எம்.கே பைலஸ் 2 வெளியிடப்படும் – தலைவர் அண்ணாமலை

ஜூலை 9 ல் டி. எம். கே பைலஸ் 2 வது பாகம் வெளியிடப்படும். என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 6 நாள் பயணமாக இங்கிலாந்து சென்று விட்டு நேற்று 28.06.2023 அன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலைக்கு பா‌.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட  நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பா.ஜ.க. சார்பாக இங்கிலாந்துக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றேன். பிரிட்டன் பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுடன் உரையாற்றினேன். இலங்கை பிரச்னை, வடகிழக்கு பிரச்னை போன்றவற்றில் இந்தியா எடுத்திருக்கக்கூடிய முடிவுகளை இங்கிலாந்து தமிழர்கள் பாராட்டுகிறார்கள். வடகிழக்குப்பகுதியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பிரதமர் செய்த பணிகள் குறித்து இங்கிலாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பாராட்டுகிறார்கள்.  எனது தமிழக நடைபயணத்தை தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வர உள்ளார். அவரது தேதிக்கு காத்திருக்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில் தேதி பற்றி தகவல் வரும். ஜுலை 2-வது வாரத்தில் கட்சி சார்பாக மற்றொரு ஊருக்கு பயணம் செய்ய உள்ளேன். இதன் பின் 2-வது அல்லது 3-வது வாரத்தில் நடைப் பயணம் தொடங்க உள்ளேன். ‌ஜூலை 9-ம் தேதி ல் டி.எம்.கே பைல்ஸ் 2 வெளியிடப்படும்” என்றார்.

அப்போது சிதம்பரம் கோயில் விவகாரம் குறித்து பேசிய அவர், “அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிதம்பரம் நடராஜர் கோயில் இருக்க கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது. திமுக அரசு முன்னுக்குப் பின் முரணாக சிதம்பரம் கோயில் விவகாரத்தில் ‌செயல்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களை வைத்து ஒவ்வொரு புதிய பிரச்னையை தி.மு.க.‌ அரசு உருவாக்குகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

பின்னர், தந்தி டிவி நிருபர் மகேஷ் என்பவர்: ”அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரை லண்டனில் ரகசியமாக அண்ணாமலை சந்தித்தார் என தகவல் வருவதாக கேள்வி கேட்டார்.

இதற்கு தலைவர் அண்ணாமலை: “தகவல் யார் சொன்னார்கள் அண்ணா,, பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் பத்திரிகையாளராக கேள்வி கேட்கிறீர்கள் என்றால் உங்களுக்கு யார் சொன்னார்கள் தகவல், திமுக வட்டாரத்தில் இருந்து தகவல் வருகிறது என்றால் திமுக வட்டாரத்தில் இருந்து ஸ்டாலின் சொன்னாரா? உதயநிதி ஸ்டாலின் சொன்னாரா? யார் உங்களுக்கு தகவல் கொடுத்தது என யார்னு முதலில் சொல்லுங்க.. உங்களுக்கு சோர்ஸ் எங்க இருந்து வந்துச்சு?

தந்தி டிவி நிருபராக நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள், பாஜகவின் சார்பாக யார் தகவல் கொடுத்தார் என பதில் கேட்கிறேன். சிதம்பரம் கோயில் தொடர்பான தகவலை தமிழக அரசின் அறநிலையத் துறை கொடுத்தது. அதற்கு பதில் கொடுக்கிறேன்.  அதை போல் உங்களுக்கு தகவல் யார் கொடுத்தார்கள்.

ஒரு கட்சியின் மாநில தலைவரிடம் கேள்வி கேட்கும் போது, எட்டாங் கிளாஸ் படிக்கிற பையன் மாதிரி கேள்வி கேக்கக்கூடாது.  தந்தி நிறுவனத்தில் பணிபுரியும் நீங்கள் அந்த நிறுவனத்திற்கான  

ரோட்ல டீ குடிக்கிற மாதிரி கேள்வி கேக்கக்கூடாது. நீங்க கேக்குறது முட்டாள்தனமா இல்லயா? உங்களுடைய Source யார்? யார் உங்களுக்கு சொன்னார்கள்? என்னிடம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இருப்பதை போல் பதில் சொல்லும் எனக்கும் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது.

உங்களுக்கு கொடுத்த தகவல் பொய், காலையில் தூங்கி எந்திக்கும் போது கனவு வந்ததா?

எனக்கு ஒரு கேள்வி அண்ணா, நீங்க நேற்று திமுகவினர் ரூ.1000 கொடுத்து இந்த கேள்வியை கேட்க சொன்னார்கள் என்று எனக்கு தகவல் வந்தது.

கேள்விக்கு ஒரு லாஜிக் இருக்கனும், கேள்விக்கு ஒரு பதில் இருக்கனும்,

நான் என்ன நீங்க கேட்குற கேள்விக்கெல்லாம் கை கட்டி பதில் சொல்ல வந்திருக்கேனா? ஒரு மனிதனுக்கு அறச்சீற்றம் இருக்கனும்,  நான் பிரஸ் மீட்க்கு கூப்பிட்டேனா? வேலையில்லாமல் நான் பிரஸ் மீட் வச்சனா? உங்களுக்கு மரியாதை கொடுத்து தான் பிரஸ்மீட்க்கு வந்தேன்.  நீங்கள் கேட்கும் கேள்விக்கு ஏற்றாற் போல தான் என்னுடைய பதிலும் இருக்கும்” என பேசியிருந்தார்.

இந்நிலையில், தவறான கேள்வி என்று தெரிந்தும் கேள்வி கேட்டு மாட்டிக்கொண்ட நிருபர் மகேஷ் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top