‘கோ பேக் ஸ்டாலின்’ டிரெண்டிங்: திமுக அதிர்ச்சி

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் மாநில மக்கள் சமூக வலை தளங்களில் ”கோ பேக் ஸ்டாலின்” #GoBackStalin  என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. நாடு முழுதும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில், எதிர்க்கட்சி தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்காக, மத சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம், பீஹார் தலைநகரான பாட்னாவில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், நாளை 23.06.2023 நடக்க உள்ளது.

இதில் கலந்துகொள்ள, முதல்வர் ஸ்டாலின் இன்று 22.06.2023 மாலை பாட்னா செல்கிறார்.  இதற்கிடையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீஹார் மாநில மக்கள் சமூக வலைதளங்களில் கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின் வருகையை எதிர்த்து தமிழகத்தில் தலித்கள் மீதான அராஜகம், மணிஷ் காஷயப் மீதான நடவடிக்கை, இந்துகளுக்கு எதிரான திமுகவின் ஜாதி அரசியல், இந்தி மொழிக்கு எதிரான அரசியல் என பலரும் திமுகவிற்கு எதிரான கருத்து தெரிவித்து பீஹார் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் ‘கோ பேக் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

ஸ்டாலினின் வருகைக்கு 2 நாட்கள் முன்பே அதாவது நேற்று 21.06.2023 இரவு முதல் ‘கோ பேக் ஸ்டாலின்’ ஹேஷ்டேக், ‘டிரெண்டிங்’கில் முதலிடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி கோட்டம் திறப்பு விழா கடந்த 20.06.2023 அன்று திருவாரூரில் நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்க்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் நிதிஷ் குமார் திடீர் என்று ’கேன்சல்’ செய்தார். அதன் பின் ஸ்டாலின் திறந்து வைத்து பேசுகையில் ஜனநாயக விளக்கை பாட்னாவில்  ஏற்றுவதற்கான நடவடிக்கையை பிஹார் முதல்வர் கையில் எடுத்துள்ளார், அதில் நானும் பங்கேற்கிறேன் என தெரிவித்திருந்தார்.

ஸ்டாலினுக்கு பீஹாரில் எதிர்ப்பு இருப்பதை உளவுத்துறை ரிப்போர்ட் மூலம் தெரிந்து கொண்டுதான் தமிழக பயணத்தை ரத்து செய்திருக்கிறார் நிதிஷ் என்றும், ஸ்டாலின் பயன்படுத்திய ’கோ பேக்’ யுக்தி மீண்டும் பூமராங் போல ஸ்டாலினை வந்து சேர்ந்துள்ளது. இது திமுகவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top