லீ க்வான் யூவிற்கு தமிழகத்தில் சிலை, ஸ்டாலின் அறிவிப்பின் பின்னணி என்ன?

சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ க்வான் யூ அவர்களுக்குத் தமிழ்நாட்டில் சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
திடீரென்று லீ குவான் யூ மீது ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு காதல்?
முதலீடு என்ற பெயரில் இவர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட தகவல் மக்களுக்கு  ஞாபகம் வந்தால் அவர்கள் மீது தவறில்லை.
ஆனால் மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாத இன்னொரு காரணமும் இருக்கக் கூடும்.
அதாவது மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு பாதுகாப்புக்  காரணங்களுக்காக 54 சீன வலைத்தளச் செயலிகளுக்கு சென்ற ஆண்டு  தடை விதித்தது. அதில்  ஒன்றுதான் ஃப்ரீ ஃபயர் (Free Fire) என்ற சீனா பெருமளவு முதலீடு செய்துள்ள ஆன்லைன் விளையாட்டுச் செயலி. இதனால் சிங்கப்பூருக்கு 16 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டது..
இதனால் ஆத்திரம் கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் சென்ற ஆண்டு தனது உரையில் ‘நேருவின் இந்தியா’ வில் அரசியல் நடைமுறை க்ஷீணமடைந்து விட்ட’ தாக ஒப்பாரி வைத்தார்.
மேலும் அவர் ‘ஆரம்பத்தில் நல்ல குறிக்கோளுடன்தான் விஷயங்கள் துவங்குகின்றன. சுதந்திரத்துக்காகப் போராடி வெற்றி கண்ட தலைவர்கள் பெரும்பாலும் அதீத தைர்யம், உயர்ந்த பண்பு, மற்றும் அளவற்ற திறமை கொண்டவர்கள் அவர்கள் மிகப் பெரும் சோதனைகளைக் கடந்து மக்களின் மற்றும் நாடுகளின் தலைவர்களாக மாறினர்.
டேவிட் பென் குரியன் (இஸ்ரேல்), நேரு போன்றவர்கள் இவ்வகையைச்  சேர்ந்தவர்களே..நம் நாட்டிலும் இப்படிப்பட்டவர்கள் உண்டு(!)’ என்று பேசினார்.
ஆகவே லீ க்வான் யூ வுக்கு தமிழ் நாட்டில் சிலை வைப்பது தமிழ் நாட்டில் ஆன்லைன் விளையாட்டுச் செயலியை அனுமதிப்பதற்கான முன்னோட்டமாக  இருக்குமோ?
இதில் வேடிக்கை என்னவென்றால் சிங்கப்பூர் பெயரளவில்தான்  ஜனநாயகக்  குடியரசு. 1959லிருந்து மக்கள் செயற்க் கட்சி (People’s Action Party) தான் தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. லீ குவான் யூ 1959 லிருந்து 1990 வரை பிரதமராக இருந்தார்.அவருக்குப் பின்பு அதே கட்சியைச் சேர்ந்த கோஹ் சோக் டோங் பிரதமரானார். அவர் 2004 வரை பதவியில் இருந்தார். நகைச்சுவை என்னெவென்றால் மூத்த அமைச்சர்’ என்ற பதவியை உருவாக்கி முன்னாள் பிரதமர் லீ க்வான் யூ வை த் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்!
2004ல் லீ க்வான் யூவின் மகன் (வேறு யார்?) லீ ஷின் லூங் பிரதமரானார். இப்போது அவரது தகப்பனார் லீ க்வான் யூ வழிகாட்டி அமைச்சர் என்ற பெயரில் அமைச்சராக நீடித்தார்!
2011 வரை அப்பதவியில் இருந்தார்.
பீப்பிள்ஸ் ஆக்ஷன் பார்ட்டி’  தொடர்ந்து இடைவெளியே இல்லாமல் சிங்கப்பூரை ஆண்டு வருவது எப்படி?
ஒன்றுமில்லை ரொம்ப சிம்பிள்! நம்ம ஊர் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் செய்வதுதான்! அதாவது எதிர்க் கட்சியினர்  யாரவது அரசைக் குறை கூறினால் அவர்கள் மீது மான நஷ்ட வழக்குப் போட்டு அவர்களை ‘மஞ்சள் கடுதாசி’ கொடுக்கவைத்து  திவாலாக்குவது (Insolvent) மற்றும் அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்க முடியாமல் செய்வதுதான் தந்திரம்!
தொழிலாளர் கட்சியின் ஜே பி ஜெயரத்னத்துக்கும், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சீ சூன் யுவான் க்கும்  இந்த கதிதான் நேர்ந்தது.
மேலும் அரசைக் குறைகூறும் ஊடகத்தினர் மற்றும் சமூக வலைத்தள எழுத்தாளர்கள் ஆகியோர் மீதும் வழக்குகள் போடப்பட்டு முடக்கப்படுவர்.
இந்த  ‘ஜனநாயகச் செயல்பாடுகளி’ன் உச்ச கட்டமாக’ எதிர்க் கட்சியினருக்கு வாக்களிப்போர் அரசு வீட்டு வசதித் திட்டங்களில் முன்னுரிமையை இழந்து பட்டியலின் கடைசி இடத்துக்குத் தள்ளப்படுவர் என்ற ‘சீரிய நடைமுறை’ கையாளப்படுகிறது!
இப்போது தெரிகிறதா, ஏன் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த மஹாநுபாவர்களின்  மீது ‘கொள்ளை இஷ்டம்’ என்று!

– இரா.ஸ்ரீதரன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top