முத்தமிழ் வித்தவர் மு.கருணாநிதி

ஜூன் 3–ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அவரின் மகனும், திமுகவின் வாரிசு உரிமை வழி வந்தவரும் இன்றைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  அரசு காசில் அப்பாவுக்கு விழா எடுத்தால் தான் அவரின் ஆன்மா சாந்தியடையும் என்பது முதல்வரின் நம்பிக்கையாக இருக்கலாம்.  மேலும் தன் தந்தையை முத்தமிழரிஞர் என்றும் போற்றியுள்ளார். இதுதான் நமது ஆவலைத் தூண்டியுள்ளது.

கருணாநிதி உண்மையில் முத்தமிழ் வித்தகரா அல்லது முத்தமிழை தனது சுயநலத்திற்காக வித்தவரா என நாமும் அவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் தொடர்ந்து பார்ப்போமே…
சூழ்ச்சியாலும், அருவருப்பான வசை பாடல்களாலும் தன்னை எதிர்ப்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் அரசியலை விட்டு அப்புறப்படுத்தும் வேலையை கச்சிதமாக செய்வதில் கைதேர்ந்தவர் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி. அரசியலில் தான் வளரும்போதே இந்த குயுக்தி புத்தியையும் வளர்த்துக் கொண்டார். MLA ஆவதற்கு முன்பே இப்படித்தான் இருந்துள்ளார். அவற்றை முழுவதும் பதிவு செய்தால் ஒரு பெரிய புத்தகமே போட வேண்டும்.
அப்படி கருணாநிதி பேசிய அருவருப்பான பேச்சுக்களின் ஒரு மிகச்சிறிய பகுதியை மட்டும் இங்கே உங்கள் முன் வைக்கிறேன்.

கருத்தை கருத்தால் மட்டுமே விமர்சிக்க வேண்டிய கருணாநிதி ஜீவானந்தத்தை பார்த்து செவிடன் ஜீவா என்று அருவருப்பாக விமர்சித்தார்.


முதலாவதாக சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும், தமிழகத்தின் முதல்வராகவும் திகழ்ந்த ராஜாஜி அவர்களைப் பற்றி சொன்னதிலிருந்து ஆரம்பிப்போம்.
1972ம் ஆண்டில் மதுவிலக்கை நீக்கி சாராயக்கடைகளை திறந்தார் முதல்வராக இருந்த கருணாநிதி. அப்போது ராஜாஜி அவர்கள் கருணாநிதியின் இல்லத்திற்கே நேராக சென்று இது எதிர்கால தமிழக மக்களின் வாழ்க்கைக்கு நல்லதல்ல. எதிர்கால சந்ததிகளின் நலனை பாதிக்கும். சட்டம் ஒழுங்கு சீர்கெடும். எனவே சாராயக்கடையை திறக்கும் முடிவை கைவிட்டு தமிழகத்தில் மீண்டும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கருணாநிதியிடம் நேரில் வலியுறுத்தி விட்டு கிளம்பினார் மூதறிஞர் ராஜாஜி.  அன்றைக்கு சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. ராஜாஜி கிளம்பி சென்றவுடன் முதல்வர் கருணாநிதியை பத்திரிக்கையாளர்கள் சந்தித்து ராஜாஜியுடன் ஆன சந்திப்பு பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கருணாநிதி “கொட்டிய மழையில் குடை பிடித்துக் கொண்டு என் வீட்டிற்கு வந்து, தன் பேரனுக்கு வேலை வேண்டும் என்ற கோரிக்கையுடன் என்னை சந்தித்தார் ராஜாஜி” என்று கேவலமான பொய்யை மக்களிடம் பரப்பினார்.
கருணாநிதியின் இந்த கருத்தை பற்றி ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக இருந்த கர்மவீரர் காமராஜர் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் “ராஜாஜி கண்டிப்பாக ஒரு நாளும் கருணாநிதியின் வீட்டு படி ஏறி தன் சொந்த நலனுக்காக பேச மாட்டார்.  தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி மதுவிலக்கை வலியுறுத்த மட்டுமே சந்தித்து இருப்பார். ராஜாஜியின் நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது” என்றார் காமராஜர்.
கம்யூனிச தலைவர்களில் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக கம்ப ராமாயணத்தில்  மிகப் பெரிய பாண்டித்தியம் பெற்றவருமான பெரியவர்  ஜீவானந்தம் அவர்கள் கருணாநிதியின் கீழ்த்தரமான அரசியலையும் சூது மதியையும் கடுமையாக விமர்சித்திருந்தார். கருத்தை கருத்தால் மட்டுமே விமர்சிக்க வேண்டிய கருணாநிதி ஜீவானந்தத்தை பார்த்து செவிடன் ஜீவா என்று அருவருப்பாக விமர்சித்தார்.

கடும் சினம் கொண்ட காமராஜர் அவர்கள் தன் சுபாவத்திற்கு மாறாக நீ உட்கார்ந்த நாற்காலியில் நான் உட்கார ஆசைப்படுவேனா அதைவிட அசிங்கம் இந்த உலகில் எனக்கு வேற ஏதாவது உண்டா என்று மிகவும் காட்டமாக பதிலடி கொடுத்தார்.


கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பொலிட் பீரோவில் தமிழகத்திலிருந்து முதன் முதலில் இடம் பெற்றவர் முதுபெரும் அரசியல் தலைவர் பி ராமமூர்த்தி அவர்கள். அவரும் திராவிட இயக்கங்களை கடுமையாக சாடி “ஆரிய மாயையா? திராவிட மாயையா?” என்று புத்தகம் எழுதினார். அவரும் கருணாநிதியின் கீழ்த்தரமான அரசியலை கடுமையாக விமர்சித்தார்.  அந்த ஒரே காரணத்திற்காக அவரை நொண்டி ராமமூர்த்தி என்றே கருணாநிதி அழைத்து வந்தார்.
கர்ம வீரர் காமராஜர்
முரசொலியில் கார்ட்டூன் வரையும் போது காமராஜர் அவர்களை காண்டாமிருகம் போன்றே வரைந்து அதை குரூரமாக ரசித்து மகிழ்ந்தவர் கருணாநிதி.
ஒரு சன்னியாசி போல் தூய வாழ்க்கை வாழ்ந்த காமராஜரை கேவலப்படுத்துவதற்காக அவரை பெண் பித்தர் ஆகவும் இட்டுக்கட்டி அசிங்கப்படுத்த முயன்றார் கருணாநிதி. பல்வேறு வசை பாடல்கள் இருந்தாலும் குறிப்பாக காமராஜர் அவர்களை யோக மங்களம் பஜனை நாயகம் என்று எழுதி வந்தார் கருணாநிதி. அதாவது மதுரையில் யோகமங்களம் என்ற ஒரு பெண்ணுடன் தகாத உறவு காமராஜருக்கு இருக்கின்றது என்று கேவலமான பொய்யை சொன்னவர் கருணாநிதி.
அரசு முறை பிரயாணமாக ஒரு முறை ரஷ்யா சென்றார் பெருந்தலைவர் காமராஜர்.  அப்போது முரசொலியில் “ரஷ்யாவுக்கு நம்ம ஊரிலிருந்து எருமைத் தோலை தான் இதுவரை ஏற்றுமதி செய்து வந்துள்ளோம். முதன்முறையாக ஒரு எருமையே ரஷ்யா செல்கிறது” என்று எழுதி காமராஜர் அவர்களை எருமையுடன் ஒப்பிட்டார்.  கருவாட்டுக் காரியின் மகன் என்றும் அவரை விமர்சித்தார்.
பொது வாழ்க்கையில் ஒரே ஒரு நயா பைசா கூட திருடாத காமராஜரை பார்த்து ஆந்திரா வங்கியில் பல லட்சங்கள் வைத்துள்ளார் என்று பொய் சொன்னார் கருணாநிதி.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் வசித்து வந்த திருமலை பிள்ளை தெருவில் உள்ள வீடானது ஒரு தேசிய சிந்தனை கொண்ட தொழிலதிபருக்கு சொந்தமானது. அந்த வீட்டில் தேசியத் தலைவர் காமராஜர் அவர்கள் இலவசமாக தங்கிக் கொள்ள அந்த  தொழிலதிபர் அனுமதித்தார்.  ஆனால் அந்த வீட்டின் புகைப்படத்தை எடுத்து முரசொலியில் பகிர்ந்து ஏழைப் பங்காளனின் பங்களா பாரீர் என்று பொய் பிரச்சாரம் செய்தார் கருணாநிதி. பெருந்தலைவர் காமராஜர் மரணம் அடைந்த பொழுது அவர் சட்டைப் பையில் 120 ரூபாய் மட்டுமே இருந்தது. சில கதர் சட்டை, வேட்டிகளும் 120 ரூபாய் பணமும் மட்டுமே வைத்து மிக எளிமையாக, ஊழலுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்த தூய மனிதனை தன்னைப்போல் அவரையும் நினைத்து பொது சொத்தை கொள்ளை அடித்தவர், காமாந்தகாரர் என்றெல்லாம் விமர்சனம் வைத்தார் கருணாநிதி.
இது எல்லாவற்றையும் விட மிகவும் கேவலமான ஒரு விஷயம்:
பஞ்சாயத்து யூனியன் தலைவர்களை பலரும்  சேர்மன் என்று தமிழக அரசியலில் அழைத்து வந்தார்கள்.  அந்த காலகட்டத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற காமராஜர் அவர்களை தமிழ் சமுதாயத்தில் பெரும்பாலும் “பெருந்தலைவர்” என்றே அழைத்து வந்தனர். காமராஜர் அவர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற வக்கிர புத்தியுடன் பஞ்சாயத்து யூனியன் சேர்மமேன்களை ஒன்றிய பெருந்தலைவர் என்று அழைக்க வேண்டும் என உத்தரவு போட்டார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.
மக்கள் தலைவர் காமராஜர் அவர்கள் அதிரடியாகவோ ஆவேசமாகவோ பேசி யாரும் பார்த்திருக்க முடியாது. ஆனால் ஒருமுறை அவரையே அப்படி பேச வைத்த பெருமை கருணாநிதியையே சாரும்.  திமுகவின் ஊழல்களை கடுமையாக சாடி பிரச்சாரம் செய்து தேவையான நேரங்களில் போராட்டமும் நடத்தினார் ஸ்தாபன காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர்.  அவரை அரசியல் ரீதியாக விமர்சிக்க திராணியற்ற கருணாநிதி கொச்சையாகவும், அருவருப்பாகவும் பேசி முதல்வர் நாற்காலியில் அமர்வதற்காக பதவி வெறி கொண்டு காமராஜ் இப்படி எல்லாம் பேசுகிறார். போராட்டம் நடத்துகிறார். என்று தன் தவறை மறைக்க பேசினார். இதனால் கடும் சினம் கொண்ட காமராஜர் அவர்கள் தன் சுபாவத்திற்கு மாறாக நீ உட்கார்ந்த நாற்காலியில் நான் உட்கார ஆசைப்படுவேனா அதைவிட அசிங்கம் இந்த உலகில் எனக்கு வேற ஏதாவது உண்டா என்று மிகவும் காட்டமாக பதிலடி கொடுத்தார். அப்படி என்றால் எந்த அளவிற்கு கொடூரமான விமர்சனங்களை பெருந்தலைவர் காமராஜருக்கு எதிராக கருணாநிதி பேசியிருப்பார்.
இதே போன்று MGR, ஜெயலலிதா, அப்துல்கலாம், ஜவஹர்லால் நேரு, இந்து கடவுள்கள் என்று கருணாநிதி அவர்களால் கடுமையாக கீழ்த்தரமாக விமர்சிக்கப்பட்ட விஷயங்கள் அனுமார் வால் போன்று மிக நீளமானது அவற்றை வரக்கூடிய வாரங்களில் பார்ப்போம்.
யார் தயவில் தமிழக முதல்வர் ஆனாரோ, அந்த MGR ரை அரசியல் ரீதியாக வீழ்த்துகிறோம் என்று நினைத்துக் கொண்டு தமிழர் விடுதலை இயக்கம் என்கிற ஒரு அமைப்பை  திமுகவினரை விட்டு  ஆரம்பிக்க செய்தார்.  கோயம்புத்தூரில் ஒரு போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தின் விளைவு, மலையாளிகளின் வியாபார நிறுவனங்கள் குறி வைத்து சூறையாடப்பட்டது. இதையும் அடுத்த இதழ்களில் பார்ப்போம்.

-ஜெயராமன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top