தில்லியில் ராணுவ இசை, சாகசம் மற்றும் பழங்குடி நடனத் திருவிழா

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாளை முன்னிட்டும், விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்ற சிறப்பு
தருணத்தை குறிக்கும் வகையிலும் மத்திய பழங்குடி விவகாரங்கள் அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகத்துடன்
இணைந்து ராணுவ இசை, சாகசம் மற்றும் பழங்குடி நடனத் திருவிழாவான ஆதி ஷவுரியா- வீரத்தின் திருவிழா என்ற
நிகழ்ச்சியை புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்றும் இன்றும் (ஜனவரி 23 மற்றும் 24-ஆம் தேதிகளில்)
நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கடலோர காவல் படை ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படுகிறது.
ஆயுதப் படை வீரர்களின் பேண்ட் வாத்திய நிகழ்ச்சிகள், கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் முதலியவையும், இந்தியா
முழுவதும் உள்ள பழங்குடி கலாச்சாரத்தைப் பறைசாற்றும் நடன நிகழ்ச்சிகளும் திருவிழாவின்போது
நடைபெறுகின்றன. கேரளா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட், லடாக், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்
இருந்து பழங்குடி நடனக் கலைஞர்கள் விழா பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top