எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை : ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை என்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று (மே 04) நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம், பாலமு பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தான் வறுமையில் வாடியதால், ஏழைகளின் வாழ்க்கை எவ்வளவு சிரமம் என்பது தனக்கு தெரியும்.

எனவே தான், கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தனது வாழ்க்கை அனுபவத்தால் ஈர்க்கப்பட்டவை. இந்த கண்ணீர் ஏழை மக்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
எனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை. ஊழல் செய்து வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளில் முதல்வராகவும், பிரதமராகவும் இருந்த என் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

உங்ள் வாக்கு பலத்தால் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டது. ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் வரை  நக்சலிசமும் பயங்கரவாதமும் பரவி இருந்தது.

உங்கள் ஒரு வாக்கு பல தாய்மார்களின் நம்பிக்கையை நிறைவேற்றி இந்த பூமியை நக்சலைட் பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top