வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை: தலைமைத் தேர்தல் ஆணையர்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். ஆகவே, மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வரவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (ஏப்ரல் 19) முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இந்நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தனது சக தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார் மற்றும் எஸ்.எஸ். சந்து ஆகியோருடன் இணைந்து டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் உருவாக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேர்தல் நடைமுறைகளை கண்காணித்தார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகங்கள் குறித்த கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பதில் அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர்,

“இது ஒரு தீர்க்கப்பட்ட பிரச்சினை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை. அவை குறித்து உச்ச நீதிமன்றமும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நாங்கள் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் எதுவும் செய்ய முடியாது. ஒவ்வொரு முறையும் அரசியல் கட்சிகளும் அதன் வேட்பாளர்களும் போலி வாக்குகள் பதிவாகின்றன என்று கூறுகின்றனர்.

தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் செயல்முறைகள் என பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் இதில் உள்ளன. எனவே வாக்களார்கள் வாக்களிப்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இது வாக்களித்து மகிழ்ந்திருக்கும் தருணம். எதையும் சந்தேகிக்கும் நேரம் இல்லை. வாக்காளர்களின் வாக்குகள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கும். மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

தொழில்நுட்பம், நிர்வாகம் மற்றும் செயல்முறைகள் சார்ந்து பல்வேறு நடைமுறைகள் இணைந்து இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தோல்வியை முன்கூட்டியே அறிந்துகொண்டு,வேண்டும் என்றே வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகத்தை எழுப்புகின்றனர். இது போன்றவர்களுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்றுக்கொடுப்பார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top