எங்கும் கேட்கும் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் – ஸ்ரீராமர்: ஆலயத்தின் சிறப்பம்சங்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் மிக பிரமாண்டமாக ஸ்ரீராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஜனவரி 22) பிற்பகல் 12.20 மணிக்கு கோலாகமாக நடைபெற்றது.. இதனால் அயோத்தி விழாக் கோலம் பூண்டது. ராமர் பக்தர்கள் உலகம் முழுவதிலும் ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம் முழுக்கம் வலுத்தது.

இந்த நிலையில், ஸ்ரீராமர் ஆலயத்தின் சிறம்பம்சங்கள் பற்றி காண்போம்:

திரேதா யுகத்தில் அயோத்தியில் அன்னை கௌசல்யா மற்றும் தசரதன் ஆகியோருக்கு பிறந்தவர்தான் ஸ்ரீராமர்.

இராமபிரான் நவமி நாளில் பிறந்ததால் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில், ‘ராம நவமி’ கொண்டாடப்படுகிறது.

இராமபிரான் பிறந்த மண்ணான அயோத்தியில் நாகர் பாரம்பரிய முறையில் 3 மாடிகளைக் கொண்டதாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரமும் கொண்ட இக்கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டவை.

392 தூண்கள், 12 கதவுகள் கொண்ட இக்கோவிலின் ஒவ்வொரு தூண்களிலும் சுவர்களிலும் பல்வேறு தெய்வங்களின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

முதல் தளத்தில் ஸ்ரீராமர் தர்பார் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான கருவறையில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில் நித்திய மண்டபம், ரேங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என 5 மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிழக்குத் திசையிலிருந்து 32 படிக்கட்டுகள் ஏறி, பக்தர்கள் கோவிலுக்குள் நுழையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களுக்காக சாய்வுதளம், மின் தூக்கி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கோவிலைச் சுற்றிலும் 732 மீட்டர் நீளம், 14 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராமர் கோவிலின் அருகே வரலாற்று சிறப்புமிக்க, பழங்கால கிணறு ஒன்றும் உள்ளது.

25,000 பக்தர்கள் தங்கும் வகையிலான மண்டபத்தில் மருத்துவர், லாக்கர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இன்று சரியாக நண்பகல் 12.20 மணிக்கு பால ராமரை பிரதமர் நரேந்திர மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top