மாப் போடும் குச்சியை வைத்து குளுக்கோஸ் ஏற்றும் அவலம்: விடியாத திமுக ஆட்சியின் சுகாதாரத்துறை வளர்ச்சி!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாப் குச்சியை வைத்து நோயாளிகளுக்கு குளுக்கோஸ் ஏற்றும் அவலநிலையில்தான் திமுக அரசின் சுகாதாரத்துறை உள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு, காஞ்சிபுரத்தில் உள்ள மக்கள் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, பிரசவ பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளது.

குறிப்பாக, வைரஸ் காய்ச்சல், டெங்குகாய்ச்சல் மற்றும் கொரோனா தொடர்புடைய காய்ச்சல் என்று வருபவர்களுக்கு தனி தனி வார்டுகள் இல்லாததால் பொது வார்டில் இருப்பவர்களுக்கும் தொற்று ஏற்படும் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் படுக்கைக்கு அருகில் குளுக்கோஸ் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்டான்ட் பொருத்தப்படாமல் உள்ளது. அதனால், தரையை துடைக்க பயன்படுத்தப்படும் மாப் குச்சியை கட்டிலுடன் சேர்த்து கம்பி வைத்துக் கட்டி ஸ்டாண்டாக பயன்படுத்துகின்றனர்.

மேலும், சில இடங்களில் மின் வயர்கள் மற்றும் ஸ்விட்சுகள் சரியாக இல்லாததால் நோயாளிகளுக்கு மின்சாரம் தாக்கும் அபாயமும் உள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் ஏற்றப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள மா.சுப்பிரமணியன் எந்நேரமும் ஏதாவது ஒரு ஊரில் கருணாநிதிக்காக ஓட்டப்பந்தயம் நடத்துவதில் குறியாக உள்ளார். அரசு மருத்துவமனையில் அடிப்படை தேவைகள் இன்றி நோயாளிகள் அவதிப்படுவதை கண்டுக்கொள்வாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழக அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மாப் குச்சிவை வைத்து குளுக்கோஸ் ஏற்றப்படுவது போன்று, வடமாநிலங்களில் எதாவது ஒரு அரசு மருத்துவமனையில் நடந்திருந்தால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வடமாநில அரசுகளின் ஆட்சியில் இப்படிதான் சுகாதாரத்துறையா என கேள்வி எழுப்பி வந்திருப்பார்கள். ஆனால் நடந்தது தமிழகம் என்பதால் அனைவரும் திமுக அரசை விமர்சிக்காமல் அமைதியாக உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top