மத்தியபிரதேசம்: மோகன் யாதவ் முதல்வராக பதவியேற்பு: பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் இன்று (டிசம்பர் 13) பதவியேற்றுக் கொண்டார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க., தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 இடங்களில் 163 இடங்களை  பாஜக கைப்பற்றியது.  காங்கிரஸ் வெறும் 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மை பெற 116 இடங்கள் போதும். ஆனால் இமாலய வெற்றியை பாரதிய ஜனதா கட்சி பதிவு செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்  ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்தா  ஆகியோர் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில், போபாலில் இன்று ( 13.12.2023 )  முதல்வரின் பதவியேற்பு விழா நடைபெற்றது.  விழாவில் மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவுக்கு அம்மாநில ஆளுநர் மங்குபாய் சாகன்பாய் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் துணை முதல்வர்கள் ராஜேந்திர சுக்லா மற்றும் ஜெகதீஷ் தேவ்தா ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, நிதின் கட்கரி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top