ராமேஸ்வரத்தில் திடீரென்று ஊடுருவிய 10 இலங்கை முஸ்லிம்கள்: தலைமறைவானதால் அதிர்ச்சி!

ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் காவல் படையினர் மற்றும் உளவு அமைப்புகள் சேர்ந்து ‘சாகர் கவச்’ என்ற பெயரில் பாதுகாப்பு பயிற்சி மேற்கொண்ட சமயத்தில் இலங்கையில் இருந்து 10 முஸ்லிம்கள் படகு மூலமாக தமிழகத்தில் நுழைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு பயங்கரவாதிகளோ அல்லது போதைப் பொருள் கடத்தல்காரர்களோ ஊடுருவதைக் தடுப்பதற்காக ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் காவல் படையினர் இணைந்து ‘சாகர் கவச்’ என்ற பெயரில் பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இதற்காக மத்திய அரசின் இரண்டு கப்பல்கள், இலங்கை தலைமன்னாருக்கு அருகில் கச்சத்தீவு பகுதியை ஒட்டி கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீரர்கள் அந்த கப்பல்களில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 11) காலை இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் மண்டபம் அருகில் இருக்கும் முனக்காடு கடல் பகுதிக்கு இரண்டு படகுகளில் 10 முஸ்லிம்கள் வந்துள்ளனர். அவர்களை இறக்கி விட்டு ஒரு படகு அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. மற்றொரு படகு மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

முனக்காடு பகுதியில் யாருமே இல்லாமல் ஒரு படகு மட்டும் தனியாக இருப்பதை ரோந்துப் படையினர் கண்டுள்ளனர். இதனையடுத்து அப்படகின் எண்ணை வைத்து அது தலைமன்னாரில் பதிவு செய்யப்பட்டது எனக் கண்டறிந்து படகின் உரிமையாளருடன் போலீசாரும் இந்திய உளவு அமைப்பினரும் பேசியுள்ளனர்.

அப்போது படகு உரிமையாளர் அந்தப் படகு என்னுடையதுதான். இரண்டு நாட்களுக்கு முன் படகு வாடகைக்கு வேண்டும் என சிலர் என்னை அணுகினர். அவர்களின் பேச்சு எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நான் படகு தரமுடியாது என சொல்லி விட்டேன். இதனால் அவர்கள் படகை திருடிச் சென்றுவிட்டனர் என போலீசாரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து, மண்டபம் பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரண்டு படகுகளில் வந்த 10 பேரும் முஸ்லிம்கள் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் முனக்காட்டில் இறங்கி எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை. இது தமிழக பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான விஷயம்.  

இது பற்றி உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் தற்போது தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எங்கு சென்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கடலோர காவல் படை, உள்ளூர் போலீஸ், தனிப்பிரிவு போலீஸ், மரைன் போலீஸ், கியூ பிரிவு போலீசார், மத்திய உளவு பிரிவு அதிகாரிகள், ரா உளவு அதிகாரிகள் என, பலதரப்பட்ட பாதுகாப்பு பிரிவு அலுவலர்கள் இணைந்து தான், ‘சாகர் கவச்’ பாதுகாப்பு பயிற்சி நடத்துகின்றனர்.

இந்த சமயத்தில் அவர்கள் ஊடுருவி இருக்கிறார். இது சட்டப்படி கடுமையான குற்றம்; தண்டனையும் அதிகம். இருந்தாலும், அதையும் மீறி, மண்டபம் கடலோர பகுதியில், ஏராளமான குற்றங்கள் நடந்து வருகின்றன.

படகை நிறுத்தப்பட்ட இடத்திலேயே வைத்துள்ளோம். ஊடுருவியவர்கள் மீண்டும் படகை நோக்கித்தான் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் உள்ள போலீசார் இப்படி அஜாக்ரதையாக செயல்படும் காரணத்தினால்தான் இலங்கையில் இருந்து  பயங்கரவாதிகள் நுழைய வாய்ப்பு ஏற்படுகிறது. இனிமேலாவது மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் தீவுகளை தீவிரமாக கண்காணித்து பொதுமக்களின் பாதுகாப்பை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் , தமிழக போலீசாரை நம்பி பிரஜோனம் இல்லாத நிலையில் மத்திய அரசு அதிக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்  பொதுமக்கள் கூறுகின்றனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top