ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்களை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சுமார் 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனா நாட்டில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நமது பாரதத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பலர் பதக்கங்களை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளனர்.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டு தொடரில் பாரதம் இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

ஆசிய விளையாட்டு தொடரில் 100 பதக்கங்களை பாரதம் வென்றுள்ள நிலையில், வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது;

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரு முக்கிய சாதனையை எட்டியுள்ளது. 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 இந்தியாவிற்கான இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தவும், வருகின்ற 10 ஆம் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top