இந்தியாவிடம், சீனா வாலாட்ட முடியாது: எல்லையில் விரைவில் உயரமான சாலை, சுரங்கப்பாதை, விமானதளங்கள்…! 

இந்தியாவிடம் சீனா வாலாட்டினால் ஒட்ட நறுக்குவதற்கு ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உலகின் மிக நீளமான சாலை,  சுரங்கப்பாதை மற்றும் போர் விமானங்கள் இறங்கும் வகையிலான விமான தளங்களை  அமைக்கின்ற பணியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இது பற்றி எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி கூறியிருப்பதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உம்லிங் லா பாஸ் பகுதியில் உலகிலேயே மிக உயரமான சாலையை நாம் அமைத்த சாதனையை நாமே தற்போது முறியடிக்க இருக்கிறோம்.

கிழக்கு லடாக்கில் டெம்சாக் செக்டார் பகுதியில் உள்ள பக்சே- மிக் லா இடையில் அமைய இருக்கின்ற சாலை உலகின் மிக உயரமான சாலை என்ற புதிய சாதனையைப் படைக்க இருக்கிறது.

கடந்த 15ம் தேதி லிக்ரு, மிக் லா, மற்றும் புக்சேவை ஆகிய பகுதிகளை  இணைக்கின்ற வகையில், 19,400 அடி உயரத்தில் சாலை அமைக்கும் பணியை பிஆர்ஓ துவக்கியது. சீனா எவ்வித சிக்கலை ஏற்படுத்தினாலும், அல்லது எல்லைக் கோட்டைத் தாண்டினாலும் உடனடியாக அப்பகுதிக்கு ஆயுதப்படைகளை அனுப்புவதற்கு இந்த சாலை உதவும்.

மேலும் உலகின் உயரமான சுரங்கப்பாதையாக ‘சிலா சுரங்கப்பாதை அமைகிறது. இரண்டு வழிப்பாதையாக அமைந்துள்ள இந்தச் சுரங்கப்பாதை பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன

. மிக விரைவில் பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பாதையை திறந்து வைக்க உள்ளார். உலகிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையாக இது இருக்கும்.

ஹிமாச்சல பிரதேசம் மணாலியை, லடாக்கின் ஜன்ஸ்கர் வழியாக லே பகுதி வரை இணைக்கும் ஷின்கு லா சுரங்கப்பாதை அமைக்கும் பணியையும் பிஆர்ஓ துவக்க உள்ளது. இது உயரமான சுரங்கப்பாதை என்ற பெருமையை பெறும்.

அதே போல் போர் விமானங்கள் வந்து செல்லும் வகையில் நயோமா விமான படை தளம் அமைகிறது. கிழக்கு லடாக்கின் சுமார் 30 கி.மீ. தொலைவில் அமையும் இந்த விமானபடை தளத்தின் வேலைகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் சீனா எல்லையில் வாலாட்டுவதை நிறுத்தியுள்ளது. ஏன் என்றால் இந்திய ராணுவத்திற்கு அனைத்து அதிகாரங்களையும் பிரதமர் வழங்கியுள்ளார். அத்து மீறினால் தகுந்த பதிலடியை அப்போதைக்கு

 அப்போதே கொடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்தியாவின் அண்டை நாட்டு ராணுவம் அடங்கியே இருக்கிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து இந்தியாவின் எல்லையில், சீனா, பாகிஸ்தான் ராணுவங்கள் வாலாட்டி வந்தன

. ஆனால் காங்கிரஸ் அரசு கண்டு காணாமல் இருந்தது. ஆனால் தற்போது நாடு பிரதமர் மோடியின் கைகளில் பாதுகாப்பாக இருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top