ஜி.கே.வாசன், தம்பிதுரை உள்ளிட்டோருடன் உணவு அருந்திய பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தென்னிந்திய எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அதன்படி தமிழகத்தை சேர்ந்தவர்களும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக தம்பிதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தற்போது எம்.பி.க்களையும் சந்தித்து வருகிறார். அதன்படி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா மற்றும் அந்தமான் நிகோபார், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களை சேர்ந்த எம்.பி.க்களை பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி இரவு டெல்லியில் சந்தித்தார். இதில் ஜி.கே.வாசன், அதிமுக தம்பிதுரை ஆகியோரும் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி இரவு உணவு சாப்பிட்டார். பணியாரம், ஆப்பம், புளியோதரை, பருப்பு குழம்பு, அவியல் உள்ளிட்ட தென்னிந்திய உணவு வகைகளும் இடம் பெற்றிருந்தன.

இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி பேசும் போது, மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை, குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், மாநில அரசுகளின் உதவி இல்லாமல் செயல்படுத்தியுள்ளது.

இவை தொடர்பான புள்ளி விவரங்களுடன் கூடிய தகவல்களை முறையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழகம், கேரளா, ஆந்திரா போன்ற பாஜக ஆளாத மாநிலங்களில் மக்களுடன் நெருக்கமாவதற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் பாஜக தேசிய தலைவர் நட்டா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top