அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானம் – நிறைவேற்றியது அமெரிக்கா

மோடியின் அமெரிக்க விஜயத்தை ஒட்டி மாபெரும் வரலாற்று நிகழ்வு ஒன்று நடந்தேறியது. அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி இரண்டும் இணைந்து இந்தியாவின்  அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக அங்கீகரித்து தீர்மானம் இயற்றியுள்ளன.  அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் பகுதிதான், அது தெற்கு திபெத் என்று கூறி வந்த சீனாவுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இந்தியாவின் அருணாசல பிரதேச மாநிலத்தை ‘தெற்கு திபெத்’ என சீனா உரிமைகோருகிறது. அதுமட்டுமல்லாமல், அருணாசல பிரதேசத்தை பார்வையிடும் இந்திய தலைவர்களுக்கும் சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக அங்கீகரிக்கும் இருகட்சித் தீர்மானம் ஜனநாயக கட்சியின் செனட் சபை உறுப்பினர் ஜெஃப் மெர்க்லி, குடியரசு கட்சியின் பில் ஹகெர்டி ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் இந்தியாவுக்கான அரசியல் குழுவின் இணைத் தலைவரான செனட்டர் ஜான் கார்னினும் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவளித்தார்.

இந்திய-சீன சர்வதேச எல்லையில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் தற்போதைய நிலையை மாற்ற  12 ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது, சர்ச்சைக்குரிய பகுதிகளில் புதிய கிராமங்களைக் கட்டமைப்பது, இந்தியாவின் பகுதிகளுக்கு சீனமொழியில் பெயர்களிட்டு புதிய வரைபடங்களை வெளியிடுவது, பூடானில் தொடர்ந்து நடைபெறும் அத்துமீறல் உள்ளிட்ட சீனாவின் நடவடிக்கைகளை இந்தத் தீர்மானம் கண்டிக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி உள்பட எரிசக்தி பாதுகாப்பை உறுதிபடுத்துவது, எல்லை உள்கட்டமைப்பு, இணைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை அருணாசலத்தில் மேற்கொள்வதற்காக இந்தியாவை இந்தத் தீர்மானம் பாராட்டுகிறது.

வெளியுறவுத் துறை மற்றும் மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஆணையம் மூலம் சீன செல்வாக்கு எதிர்ப்பு நிதி போன்ற நிதிகளைப் பயன்படுத்தி இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் உதவியை மேலும் அதிகப்படுத்துவதற்கு இரு கட்சித் தீர்மானம் உறுதியளிக்கிறது.

அமெரிக்காவின் இந்த மனமாற்றம் சீனாவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது.  மோடியின் ராஜதந்திரத்திற்குக் கிடைத்த வெற்றி இது என்கிறார்கள் சர்வதேச ஊடகவியலாளர்கள்.

*********

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top