87ஆயிரம் கோடி கடன்: திராவிட மாடலுக்கு முதலிடம்

இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பெற்றுள்ளது இதை தொடர்ந்து மஹாராஷ்டிரா, மேற்குவங்காளம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. என ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவித்துள்ளன.

இதில் மஹாராஷ்டிரா தவிர இதர மூன்றும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் என்பது குறிப்பிடதக்கது. மத்திய அரசு மாநிலங்கள் கடன் பெறுவதை குறைக்க ஆலோசனை வழங்கி வரும் வேளையில் அவற்றின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு பாரமாக மாறுகிறது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களிலும், மாநில அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த மத்திய ரிசர்வ் வங்கியின் மூலம் கடன் பத்திரங்கள் கொடுத்து மாநில அரசுகள் நிதி வாங்குகின்றனர். அன்றைய வட்டி சந்தை நிலவரப்படி நிர்ணயம் செய்யப்பட்டு கடன் வழங்கபடுகிறது.

கடந்த 2022 முதல் 2023 வரையிலான நிதியாண்டின் முடிவில் அதிக அளவில் கடன் வாங்கிய மாநிலங்கள் வரிசையில் திராவிட மாடல் ஆட்சி நடக்கும் தமிழகம் தான் முதல் இடத்தை பெற்றுள்ளது. தமிழகம் 2022 ~ 2023 நிதியாண்டில் 87,000 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் 2வது இடத்தில் மகாரஷ்டிரா மாநிலம் ரூ.72ஆயிரம் கோடி வாங்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 63,000 கோடி ரூபாய் கடன் பெற்று 3வது இடத்தில் உள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக உள்ள ஆந்திரா 57,478 கோடி ரூபாய் கடன் வாங்கி 4வது இடத்திலும், இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்திர பிரதேசம் 55,612 கோடி ரூபாயுடன் 5 வது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் வரி வசூல் செய்வது அதி­க­ரித்து வரும் சுழலில் உத்­த­ரப் பிர­தேச அரசு கடன் வாங்­கு­வ­தைக் குறைத்­து வருகிறது.

மாநிலத்திற்கான வளர்ச்சி கடன் என்னும் பெயரில் ஏல பத்திரத்தின் மூலம் தான் கடன் பெறுகின்றனர். ஆனால் தமி­ழ­க திராவிட மாடல் ஆட்சியை பொறுத்­த­வரை கடந்த இரண்டு ஆண்­டு­களில் பன்னாட்டு நிறுவனங்களின் மூலம் அன்னிய முத­லீ­டு­களையும் ஈர்க்க வெளிநாட்டு நிறுவனங்­க­ளு­டன் தமி­ழக அரசு புரிந்­து­ணர்வு ஒப்பந்­தங்­களில் கையெழுத்திட்­டுள்­ளது. அரசுக்கு முதலீடு அதிகரிப்பதாக முழக்கம் இடும் தமிழக அரசு கடன் எல்லையைத் தாண்டி கடன் வாங்குவது ஏன் என்று பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மகாராஷ்டிரா, உத்­த­ரப் பிரதேசம், தெலுங்கனா, குஜராத், உத்தராகாண்ட் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநி­லங்­கள் கடன் வாங்­கு­வதை வேக­மா­கக் குறைத்து வரு­ம் சுழலில், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் இலவசங்களை அள்ளிக்கொடுத்து அதிக கடன் வாங்கி விட்டு மத்திய அரசை குறை கூறும் அரசியல் செய்து வருவது கண்டிக்கத்தக்கது!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top