திராவிட மாடல்  என்பதில் ” மாடல்”  தமிழ்ச்சொல்லா ?  கேள்விகளால் துளைத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை !

தமிழகத்தில் திராவிட “மாடல்’ என்ற சொல் தற்போது பயன்படுத்தப்படுகிறது. தமிழும், ஆங்கிலமும் கலந்த இந்தச் சொல்லுக்குப் பதிலாக முழுமையான தமிழ்ச் சொல்லை ஏன் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தமிழக அரசு திணறும் கேள்வி ஒன்றை  கேள்வி எழுப்பியது.

 ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த திருமுருகன் இதுகுறித்து தாக்கல் செய்த மனுவில் : ” தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்பட அனைத்து அலுவலகங்கள், கடைகளில் தூய தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். இந்த அரசாணையை அமல்படுத்த தமிழ் ஆட்சி மொழி, பண்பாட்டுத் துறைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

ஆனால், பல மாதங்கள் கடந்த நிலையிலும், தூய தமிழில் பெயர்ப் பலகை வைப்பது தொடர்பான அரசாணை அமல்படுத்தப்படவில்லை. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத தமிழ் ஆட்சி மொழி, பண்பாட்டுத் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: தமிழ் மொழி வளர்ச்சிக்கு அனைத்துத் துறையினரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் உண்மையாக பாடுபட வேண்டும். சட்டக் கல்லூரி உள்பட அனைத்துக் கல்லூரிகளிலும் பாடப் புத்தகங்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும். சட்டக் கல்லூரிகளில் வழக்கு தொடர்பான குறிப்பு எடுக்கப்படும் சட்டப் புத்தகங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் தற்போது, திராவிட மாடல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதில், “மாடல்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல் என்ன?. அந்தச் சொல் ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்த வேண்டும். தமிழும், ஆங்கிலமும் கலந்த திராவிட மாடல் என்ற சொல்லை தமிழில் முழுமையாகப் பயன்படுத்தலாமே என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

 மேலும், தமிழில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்துத் தொழிலாளர் நலத்துறைச் செயலர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

திராவிடம் என்ற சம்ஸ்கிருத சொல்லும், மாடல் என்ற ஆங்கிலச்சொல்லும், திமுகவின், ஊழலும், அராஜகமும் போல் பிரிக்க முடியாததாகிவிட்டது. தமிழுக்கு இவர்கள் என்ன செய்தார்கள் என்று பட்டியலிட்டால், முதலில் வருவது ஸ்டாலின், சன் டிவி, ரெட்ஜெயின்ட் , சன்சைன் மற்றும் ஜி ஸ்கொயர்,  ஆகிய பெயர்கள்தான், இவற்றை  தமிழில் மாற்றிவிட்டு இவர்கள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதில் ஆர்வம் காட்டட்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top