நாற வாய் பிச்சைகாரனின் ஓலமும், தொடைநடுங்கி எஜமானனின் ஜாலமும் ! எஸ். ஆர் சேகர்

சாலையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பிச்சைக்காரன் தனது வயிற்றுப் பிழைப்பிற்காக, பொதுமக்களின் கவனத்தை
ஈர்க்க கத்தியோ தட்டை தட்டியோ பிச்சை எடுக்க முயற்சிப்பான்.
தனது பரிதாப நிலை, தனது திறமையை பார்த்து, சாலைகளில் செல்பவர்கள் அதிகமாக வழங்க வேண்டும் என்பது
அவன் எண்ணமாக இருக்கும். அப்படி அறிவாலய வாயிலில் பதவிப் பிச்சையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பவர்தான்
அவர். பல ஆண்டுகளாக அந்த இடத்தில் அமர்ந்து கூப்பாடு போட்டு பிச்சை எடுத்தாலும் அவரைவிட குறைவாக
கத்தியவர்களும், எஜமானரை காக்கா பிடிக்க தெரிந்தவர்களும் பதவியை வாங்கிக் கொண்டு சென்று விட்டனர்.
இதனால் அதிருப்தி அடைந்த அந்த பிச்சைக்காரர் அண்மையில் ஒரே இடத்தில் இருந்து 63 ஆண்டுகளாக பிச்சை
எடுக்கும் தனக்கு மரியாதை இல்லை என பேசி இருந்தார். சக உபி க்களிடம் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து
இருந்தார். இருந்தாலும் ஆசை யாரை விட்டது என்ற கதையாய் தொடர்ந்து தனது எஜமானர்களை கவர பாஜகவினரை
திட்டி பேசி வருகிறார்.
ஊடகங்களை ரெட் லைட் மீடியா என வர்ணித்தது, நீதிபதிகளை ஜாதியை சொல்லி விமர்சித்தது என இவரது
வாய்க்கொழுப்பின் வரலாறு பெரியது. இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று உபிக்கள் மத்தியில் பேசிய அவர்

ஆளுநர் எச்சில் இலை எடுப்பவர், சமையல்காரன் என விமர்சித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நாங்கள்
நினைத்திருந்தால் ஆளுநர் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்க மாட்டார் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
சரி இவரது போலி வீரம் இவ்வளவு இருக்கும்போது இவர் தலைவன் இவரது எஜமானன் என்ன செய்கிறான் என்று
பார்த்தால் அதற்கு அப்படியே எதிர் பதமாக பயந்து நடுங்கி செயல்பட்டு வருகிறார்.ஆளுநரை விமர்சித்து யாரும்
பேசக்கூடாது என தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு உத்தரவு போட்டுள்ளதுடன், சமாதான நடவடிக்கைகளை
மேற்கொண்டு கவர்னர் மாளிகைக்கு வெள்ளை கொடி காட்டியுள்ளார். அதன் எதிரொலியாக தான் சட்டப்பேரவையில்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் கூட வருத்தம் கலந்த நன்றிகளை உபிக்கள் பதிவு செய்துள்ளனர்.
இன்னும் சில நாட்களில் அவர்கள் ஆளுநரின் காலை பிடித்து கெஞ்சினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
உண்மை சூழ்நிலை இப்படி இருக்க, இந்த பிச்சைக்காரர் மேடைகளில் பேசும் பஞ்ச் டயலாக்குகளையும், வீர
வசனங்களையும் முட்டாள் உபிக்கள் நம்புவார்களே தவிர சாதாரண மக்கள் அல்ல. அவர்கள் இவர்களை விட
புத்திசாலிகள். அதேசமயம் இவர்கள் பிச்சை கேட்கும் சத்தம் ஒரு அளவுக்கு மேல் அதிகமானால், சாலைகளில்
செல்பவர்களுக்கு எரிச்சல் ஊட்டினால், காசுக்கு பதிலாக “காரி” (எச்சில்) வந்து மூஞ்சியில் விழும் என்பதை மறந்து
விடாதீர்கள்.
கடைசியாக தகப்பன், மகன், பேரன் என வரிசைகட்டி பிச்சை எடுக்கும் இந்த அறிவாலய பிச்சைக்காரர் அடுத்து
கொள்ளு பேரன் வீட்டு வாசலிலும் பாத்திரத்தோடு நிற்க தயாராக இருக்க வேண்டும். அவராவது இவருக்கு பிச்சை
போடுகிறாரா ? என பார்ப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top