கூட்டணியில்லாமல் போட்டியிட திமுக தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் !

தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டால் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாது என முதல்வர் ஸ்டாலின் பேட்டி அளித்ததாக தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கு சவுக்கடி பதிலாக தனது கருத்தினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அது வருமாறு;

“1967 ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளினுடனான கூட்டணியின் காரணமாக. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே.

“1967லிருந்து, திமுக ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது. இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், நீங்கள் படுமோசமான தோல்வியை சந்தித்த தேர்தல்களும் உண்டு  திரு ஸ்டாலின் அவர்களே !

“யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள் திரு ஸ்டாலின் துணைப் பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது. மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் தலைமையில், பி.ஜே.பி இந்தியா  2024 ஆண்டு தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறும்.

” பாஜக தமிழ்நாடு கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில்,

அதை மீண்டும் செய்யத் தயங்காது.

நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் திரு ஸ்டாலின் கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா?”

என கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top