Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…! அரசியல்
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு
  • அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது: அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் உரை உலகம்
  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு
  • கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம் அரசியல்

போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர்

Posted on May 20, 2025May 20, 2025 By வ.தங்கவேல் No Comments on போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர்

‘‘போலீஸிடம் நான் கொடுத்த எல்லா ஆதாரங்களும் தி.மு.க ஐடி விங் நிர்வாகியான ராகுல் என்பவரிடம் சென்றது எப்படி? அந்த நபர் என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்.’’ என -பாதிக்கப்பட்ட மாணவி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் தெய்வா என்கிற தெய்வச்செயல். இவர் தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் நிர்வாகியாகவும் பொறுப்புகள் வகிக்கிறார்.

இந்த நிலையில், அரக்கோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 09.05.2025 அன்று ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்திலும், 16.05.2025 அன்று அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் பாலியல் புகார் மனுக்களை அளித்திருக்கிறார்.

தெய்வா மீது அங்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் நேற்று முன்தினம் (17.05.2025) டி.ஜி.பி அலுவலகம் சென்று மீண்டும் புகாரளித்திருக்கிறார். தனது புகார் மனுவில் திருமண மோசடி, பல பெண்களுடன் தொடர்பு, உடல் முழுவதும் கடித்து சித்ரவதை, கொலை மிரட்டல் என தெய்வா மீது புகார்களை கூறியிருந்தார் அந்த மாணவி.

இந்தநிலையில், அரக்கோணத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய தி.மு.க இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் மீது வன்கொடுமைப் புகார் அளித்த கல்லூரி மாணவியின் வீட்டுக்கு டி.எஸ்.பி ஜாபர் சித்திக் தலைமையிலான போலீஸார் நேற்று மாலை 4 மணியளவில் சென்று மூன்றரை மணி நேரம் விசாரணை என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பெண்ணையே மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தன்னையே போலீஸார் குற்றவாளிபோல நடத்துகின்றனர். என்று மாணவி வீடியோ வெளியிட்டிருப்பது இந்த விவகாரத்தில் பெண்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவி பேசிய வீடியோவில், ‘‘டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் கொடுத்து இரண்டு நாள்கள் ஆகின்றன. இதுவரை காவல் நிலையத்தில் இருந்து சி.எஸ்.ஆர் நகலோ அல்லது தெய்வச்செயல் மீதான எஃப்.ஐ.ஆரை மாற்றிப் போட்டதற்கான நகலோ எனக்குத் தரவில்லை.

19-5-2025 (அதாவது நேற்று) இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி காலை 11.30 மணிக்கு எனக்குப் போன் செய்து ‘உன்கிட்ட ஸ்டேட்மெண்ட் எடுக்க வேண்டும்’ என்றார். மாலை 4 மணிக்கு என்னோட வீட்டுக்கு வந்த போலீஸார் இரவு 7.30 மணிவரை ஸ்டேட்மெண்ட் எடுத்தார்கள். பாதிக்கப்பட்ட என்னுடைய தரப்பில் இருந்து ஸ்டேட்மெண்ட் பதிவுசெய்யப்படவில்லை. ‘ஸ்டேட்மெண்ட் குறித்து வெளியே சொல்லக்கூடாது’ என்றும் என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

டி.எஸ்.பி ஜாபர் சித்திக்கும் 5.30 மணிக்கு என்னுடைய வீட்டுக்கு வந்தார். ‘20 பெண்கள் பாதிக்கப்பட்டதாக சொல்கிறாயே, அந்தப் பெண்கள் யார் யார்?’ என்று என்னிடமே கேள்விக்கேட்டார். எந்தெந்த பெண்கள் என்று நானா பிடித்துகொடுக்க முடியும். குற்றவாளியின் போன் நெம்பரை ஆய்வு செய்யுங்கள். அப்போது பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் உங்களுக்குக் கிடைக்கும். 20 பெண்களா அல்லது அதற்கும் மேற்பட்ட பெண்களா என்பதும் தெரியவரும் என்று டி.எஸ்.பி-யின் கேள்விக்குப் பதில் சொன்னேன்.

அதுவுமில்லாமல் போலீஸிடம் நான் கொடுத்த எல்லா ஆதாரங்களும் தி.மு.க ஐடி விங் நிர்வாகியான ராகுல் என்பவரிடம் எப்படி சென்றது? அந்த நபர் என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கிறார். ஒருப் பெண் தைரியமாக வெளியில் வந்து புகார் தருவதே அரிது. அப்படியிருக்கும்போது எனக்கு முதலில் இருந்த தைரியம் இப்போது சுத்தமாகக் கிடையாது.

தவறு செய்த தெய்வச்செயல் சந்தோஷமாக சுற்றிக்கொண்டிருக்கிறான். ஏதோ நான் குற்றவாளி மாதிரி போலீஸார் என்னிடம் நடந்துகொள்கிறார்கள். பெண்களுக்கு நீதி சொல்ல யாருமே கிடையாதா? தற்கொலை செய்துகொள்வேனோ என்று பயமாக இருக்கிறது. பொதுமக்கள்தான் நீதி வாங்கித் தரவேண்டும்’’ என்றார் கண்ணீர்விட்டு கதறி அழுதபடி.

திமுக ஆட்சி இருக்கிறது என்ற தைரியத்தில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் பல்வேறு குற்றச்சம்பவங்களை தைரியாக செய்து வருகின்றனர். இதுபோன்றவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுகவினர் மீது புகார் அளிப்பவர்கள் மீதே போலீசார் நடவடிக்கை எடுப்பதால்தான் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க தயங்குகின்றனர். மக்கள் விரோத திமுக ஆட்சி பெண்களாலேயே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதுதான் நிதர்சணமான உண்மை.

தமிழ்நாடு Tags:#Dmk, #Oreynaadu, #Tamilnadu, #Women

Post navigation

Previous Post: பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான்: நயினார் நாகேந்திரன்
Next Post: 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர்

Related Posts

  • பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம் தமிழ்நாடு
  • மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • ‘தாலிபான் திமுக அரசு’ முடிவுக்கு கொண்டுவரப்படும்: மதுரையில் ஹெச்.ராஜா சூளுரை தமிழ்நாடு
  • பயிற்சி முடித்த 478 ராணுவ அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் : சர்வதேச யோகா தினத்தில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
  • நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா
  • மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன்
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர்

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு தமிழ்நாடு
  • மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தை கையாளும் செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியா
  • தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,க்கு மிரட்டல்: திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது பாஜக புகார் அரசியல்
  • தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப் இந்தியா
  • பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்க துப்பில்லாத காவல்துறை இந்துக்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி? பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு
  • டிரம்ப் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா
  • சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது : மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme