---Advertisement---

தவெக நீக்க அறிவிப்பு சர்ச்சை: ‘ஆதரவாளரையும் நீக்குவார்களா?’ என கேள்வி

On: April 29, 2026 10:23 AM
Follow Us:
---Advertisement---

தவெக கட்சியின் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த அ.ராஜேஷ் என்ற ஆதரவாளரை கட்சியிலிருந்து நீக்குவதாக, அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் நியாஸ் வெளியிட்ட அறிக்கை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பொதுவாக கட்சி உறுப்பினர்கள் ஒழுங்கு மீறினால் கட்சியிலிருந்து நீக்கப்படுவது வழக்கமான நடைமுறை. ஆனால் ஆதரவாளரை நீக்குவதாக வெளியான இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. “ஆதரவாளர் மற்றும் உறுப்பினர் இடையே வேறுபாடு என்ன?” என்ற விவாதமும் உருவாகியுள்ளது.

இந்த அறிக்கையை பலர் கிண்டல் செய்தும், விமர்சித்தும் வருகின்றனர். சமூக வலைத்தள பேசுபொருளுக்காக இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மே 4 தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள சூழலில், கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வெளியிடும் அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் குறித்தும் அரசியல் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல விஷயங்கள் தெளிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மோ. வினோத்ராஜா

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

Leave a Comment