---Advertisement---

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி

On: October 15, 2025 4:46 AM
Follow Us:
---Advertisement---

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி வழங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரும் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி கொண்டாடுவது வழக்கம்.

தீபாவளி நாளில் காலை 6:00 முதல் 7:00 மணி வரை, இரவு 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என இந்து விரோத திமுக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
டெல்லியில் பட்டாசு வெடிக்க 5 நாட்கள் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குவதாக தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் தீபாவளி நாளில் மட்டும் காலை 6:00 முதல் 7:00 மணி வரை, இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே இந்து விரோத திமுக அரசு அனுமதி வழங்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது.

தற்போது பட்டாசு விற்கும் விலையில், குழந்தைகள் அதிகநேரம் பட்டாசு வெடிக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும் நிலையில், இந்த நாளில் வெடிக்கக் கூடாது, இந்த நேரத்தில் வெடிக்கக் கூடாது என்று தேவையற்ற கட்டுப்பாடுகளை இந்து விரோத திமுக அரசு திணிப்பது சரியல்ல. குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, கூடுதல் நாட்களுக்கு தினமும் 3 மணி நேரமாவது பட்டாசு வெடிக்க திமுக அரசு அனுமதிக்க வேண்டும் என பெற்றோர் விரும்புகின்றனர்.

இதனால், பட்டாசு வெடிக்க திமுக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் அனுமதி வழங்க வேண்டும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு கட்டுபாடுகள் பாதிப்பை ஏற்படுத்த கூடாது என இணைய வாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை என்பது ஹிந்துக்களின் பண்டிகையாக இருந்தாலும், அனைத்து மதத்தவரும் கொண்டாடும் திருவிழா ஆகும். பட்டாசு வெடித்து மகிழ்வதை அனைத்து மதங்களைச் சேர்ந்த குழந்தைகளும் செய்கின்றனர். அந்த வகையில், இது அனைத்து மதத்தவரும் கொண்டாடும் திருவிழா என்று அரசு கருத வேண்டும்.

அந்த அடிப்படையில், இது ஒரு மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பண்டிகை. இதை கொண்டாடுவதற்கு, நேரக் கட்டுப்பாடு விதித்து இடையூறு செய்வது, பண்டிகை உணர்வை கெடுப்பது போலவே இருக்கிறது. திமுக அரசு இந்த முடிவை மாற்றிக்கொண்டு பட்டாசு வெடிக்க அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

இதையும் படிக்கலாமே !

பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு

பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

5 சட்டமன்றத் தொகுதிகளையும் என்.டி.ஏ., கைப்பற்றியதால்தான் தருமபுரியை திமுக வஞ்சிக்கிறது: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசம்

விடியா அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

Leave a Comment